தயிர் (மோர்) வடை குழம்பு செய்வது எப்படி,?
சொதப்பல் சமையல் குறிப்புகள்
உளுத்தம்பருப்பினை ஊற வைத்து, உப்பு சேர்த்து கெட்டியாக (வடை மாவு பதத்தில்) அரைக்கவும்.
பச்சரிசியும், துவரம் பருப்பும் தண்ணீர் வீட்டு ஊற வைத்து, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
1 கப் தயிரில் தண்ணீர் சேர்த்து அடித்து மோர் ஆக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும். இதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
இத்துடன், அரைத்த மசாலா, மோர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
அரைத்த உளுந்து மாவை வடை போல் தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். மோர் குழம்பு கொதித்ததும் ஆற விடவும்.
ஆரிய பின் இதில் மிச்சம் இருக்கும் 1 கப் தயிர் ஊற்றி கலந்து, சுட்ட வடையை போட்டு ஊற விட வேண்டும்.
சுவையான தயிர் (மோர்) வடை குழம்பு ரெடி.
No comments:
Post a Comment