Saturday, June 1, 2024

வெண்டைக்காய் ரோஸ்ட்

 வெண்டைக்காய் ரோஸ்ட் செய்வது எப்படி??

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
வெண்டைக்காய் கால் கிலோ
கடலை மாவு2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு அரை டீஸ்பூன்
மிளகாய் தூள்அரை டேபிள் ஸ்பூன்
எண்ணெய்தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

🍒  வெண்டைக்காயை கழுவி, உலரவிட்டு பெரிய துண்டுகளாக நறுக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து வெண்டைக்காயுடன் நன்றாக கலக்கவும். 

🍒  பிறகு, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான வெண்டைக்காய் ரோஸ்ட் தயார்.

🍒இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த ரோஸ்ட் ரச சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment