Tuesday, June 25, 2024

மைசூர் ரசப்பொடி

 மைசூர் ரசப்பொடி

 தேவையானவை :

* காஷ்மீரி மிளகாய் - 15 (அ) 20
* தனியா (மல்லி) - அரை கப்
* மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்
* சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
* வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
* கடுகு - ஒரு டீஸ்பூன்
* பெருங்காயம் - அரை டீஸ்பூன்
* கொப்பரைத் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
* எண்ணெய் – 2 டீஸ்பூன்   

செய்முறை: 

வாணலியில் எண்ணெய்விட்டு மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். 

அதே வாணலியில் தனியா, மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு, பெருங் காயம், கொப்பரைத் துருவல் ஆகிய வற்றைத் தனித் தனியாகச் சேர்த்து மிதமான சூட்டில் கறுகாமல் வறுத்து எடுக்கவும். 

ஆறியபின் வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் சேர்த்துக் கொர கொரப்பாகப் பொடித்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். 

மைசூர் ரசம் செய்யும்போது இந்தப் பொடியைப் பயன்படுத்தலாம்.

☝🏻☝🏻☝🏻

No comments:

Post a Comment