Wednesday, June 19, 2024

மசாலா சீஸ் பூரி

 மசாலா சீஸ் பூரி

தேவை

கோதுமை மாவு, மைதா மாவு தலா ஒரு கப், உருளைக் கிழங்கு, வெங்காயம் தலா 2, பச்சை மிளகாய் 3, எலுமிச்சைச் சாறு - ஒன்றரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், சீஸ் ஒரு துண்டு (துருவிக் கொள்ளவும்), கரம் மசாலாத்தூள் ஒரு சிட்டிகை, இஞ்சி - சிறிய துண்டு, நெய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு தேவையான அளவு.

 செய்முறை

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும் (அல்லது துருவிக் கொள்ளவும்). 

இஞ்சி - பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். வெங்காயம், அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். கோதுமை மாவு, மைதாவுடன் துருவிய சீஸ், வதக்கிய வெங்காயம் இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, மசித்த உருளைக்கிழங்கு, நெய், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்). 

மாவை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்....

No comments:

Post a Comment