காய்கறி சூப் சமைக்க தேவையானவை
குறிப்பு
பறிமாறும் பொழுது தேவையான உப்பு தேவையான மிளகுத்தூள் மற்றும் அரிந்து வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை மேலே தூவி பறிமாறவும்.
உணவு செய்முறை : காய்கறி சூப்
Step 1.
முதலில் முதலில் கேரட்டை தோல் சீவி சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும். முட்டைக்கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
Step 2.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நேராக வெட்டிக் கொள்ளவும். தக்காளியை நான்காக வெட்டிக் கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக அரிந்து கொள்ளவும்.
Step 3.
பாசிப்பருப்பு நறுக்கிய காய்கறிகளான கேரட், முட்டைக்கோஸ், தக்காளி, சின்ன வெங்காயம் மற்றும் பச்சை பட்டாணி ஆகியவற்றை குக்கரில் போட்டு கலவை மூழ்குமளவுக்கு தண்ணீர் ஊற்றவும். பின் குக்கரை மூடி அடுப்பில் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.
Step 4.
ஓரிரு நிமிடங்களில் அடுப்பை அணைத்து விடவும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து காய்கறி கலவையை வடிகட்டி விடவும். கலவைத் தண்ணீரை தனியே வைக்கவும்.
Step 5.
வடிகட்டிய காய்கறி கலவையை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பின் வடிகட்டிய கலவைத் தண்ணீருடன் அரைத்த காய்கறி விழுதைச் சேர்க்கவும்.
Step 6.
சூப்பை அடுப்பில் வைத்து அதனுடன் சீரகப் பொடியைச் சேர்த்து சூடேற்றவும். சுவையான காய்கறி சூப் தயார். ...
No comments:
Post a Comment