Friday, June 21, 2024

பொட்டுக்கடலை பக்கோடா

 பொட்டுக்கடலை பக்கோடா

குழந்தைகள் சிறப்பான உடல் வளர்ச்சியினை பெறவும், அவர்களின் உடல் தசைகளின் வலுவிற்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து தான் பொட்டு கடலை .

ஆரோக்கியமாக பொட்டுக்கடலை பக்கோடா இதை டிரை பன்ணுங்க.

 தேவையான பொருட்கள்

2 கப்பொட்டுக் கடலை
1/2 கப்அரிசி மாவு
கருவேப்பிலை, கொத்தமல்லி இலை
4 பெரிய வெங்காயம்
1 ஸ்பூன்மஞ்சள் தூள்
2 ஸ்பூன் மிளகாய் தூள்
1 ஸ்பூன் பெருங்காயதூள்
தேவையானஅளவு உப்பு
1 ஸ்பூன்சீரகம்
எண்ணெய் பொரிப்பதற்கு

 சமையல் குறிப்புகள்

மிக்ஸி ஜாரில் பொட்டு கடலையை சேர்த்து நன்கு அரைத்து தனியாக எடுத்து வைக்கவும். 

பின்பு சல்லடையில் அரைத்த பொட்டு கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து சலித்து கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் மெலிதாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்த மல்லி இலை, கருவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு, சீரகம், மற்றும் பொட்டு கடலை மாவு, அரிசி மாவு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பிசையவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு பிசைந்த மாவை சிறிது சிறிது உருண்டைகளாக சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.

பொட்டுக்கடலை பக்கோடா தயார்!

No comments:

Post a Comment