Saturday, June 1, 2024

காலிஃப்ளவர் ஃப்ரை

 காலிஃப்ளவர் ஃப்ரை  செய்வது எப்படி?


தேவையான பொருட்கள் :

பொருள்அளவு
காலிஃப்ளவர்   ஒரு கப்
சோயா மாவு    அரை கப்
கடலைமாவு    கால் கப்
மிளகாய் தூள்   அரை டேபிள் ஸ்பூன் 
தனியா தூள்     அரை   டேபிள் ஸ்பூன் 
கரம் மசாலா தூள்கால்    டேபிள் ஸ்பூன் 
உப்பு    தேவைக்கேற்ப 
எண்ணெய்    தேவைக்கேற்ப 

செய்முறை :

✴️ முதலில் காலிஃப்ளவரை நன்கு ஆய்ந்து நீரில் சிறிது உப்பு போட்டு அதில் காலிஃப்ளவரை போட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும். பிறகு நீரை வடிகட்டி காலிஃப்ளவரை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

✴️ பிறகு காலிஃப்ளவருடன் சோயா மாவு, கடலைமாவு, உப்பு, மிளகாய்தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து தண்ணீர் தௌpத்து பிசைந்து கொள்ளவும். (கலர் வேண்டுமெனில் கேசரி கலர் சேர்த்துக் கொள்ளலாம்)

✴️ பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பிசறி வைத்திருக்கும் காலிஃப்ளவரைப் போட்டு சிவக்க எடுக்கவும்.

✴️ சுவையான காலிஃப்ளவர் ஃப்ரை ரெடி.

No comments:

Post a Comment