Friday, June 7, 2024

திருநெல்வேலி சாம்பார்

 ​​திருநெல்வேலி சாம்பார் - Tirunelveli Sambar for lunch 

🍱 தேவையான பொருட்கள்

வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப்
புளி - எலுமிச்சை அளவு
முருங்கைக்காய், கத்தரிக்காய் - 1
வெண்டைக்காய் - 4
மாங்காய் - 4 துண்டுகள்
சின்ன வெங்காயம் - 12
பச்சை மிளகாய் - 2
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது 
கொத்தமல்லி இலை - சிறிது
கடுகு உளுத்தம்பருப்பு - 1  டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

🍶அரைக்க

தேங்காய் துருவல் - 1/4 கப் 
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3
பூண்டு பற்கள் - 2

🍴செய்முறை 👇

1. புளியை  ஊறவைத்து 2 கப் தண்ணீர் ஊற்றி கரைக்கவும். 

2. தேங்காய்த்துருவல், சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் சீரகத்தை சிறிது தண்ணீர் ஊற்றி அரைக்கவும். 

3. ஒரு குழம்பு பாத்திரத்தில் புளிக்கரைசல், கத்தரிக்காய், முருங்கைக்காய், மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 

4. வாணலியில் எண்ணெய் விட்டு வெந்தயம்,  சின்ன வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் மற்றும் வெண்டைக்காய் சேர்த்து  வதக்கி புளிக்கரைசலில் சேர்க்கவும். காய்கறிகளை மூடிவைத்து புளிக்கரைச்சலில் வேகவிடவும். 

5. காய்கறிகள் வெந்ததும்  சாம்பார் பொடி, மாங்காய் துண்டுகள், வேகவைத்த பருப்பு, அரைத்த தேங்காய் விழுது  சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

6. சாம்பார்  கொதிக்க ஆரம்பிக்கும் போது பெருங்காயத்தூள் சேர்த்து 7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

சாம்பார் நன்கு கொதித்து மேலே நுரைத்து வந்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

7. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து சூடான சாம்பாரில் கலந்து கொள்ளவும். சுவையான திருநெல்வேலி சாம்பார் தயார். வாழைக்காய் புட்டு, அவியல், கதம்ப தொவரன்‌ இதற்கு சூப்பர் காம்பினேஷன். இன்றே செய்து பாருங்கள்.

No comments:

Post a Comment