சுண்டைக்காய் கூட்டு
தேவையான பொருள்கள் சுண்டைக்காய் - கால் கப், தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி, கடுகு - முக்கால் தேக்கரண்டி, மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி, புளி - சின்ன நெல்லிக்காய் அளவு, கல் உப்பு - அரை தேக்கரண்டி, துவரம் பருப்பு - 25 கிராம், கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக விடவும். துவரம் பருப்பில் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.புளியுடன் 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயுடன் 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.வேக வைத்த சுண்டைக்காயுடன் வேக வைத்த பருப்பை போட்டு அடுப்பில் வைத்து புளிக்கரைசலை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விடவும்.அதன் பிறகு மிளகாய் தூள், தேங்காய் விழுது போட்டு கிளறி அரை தேக்கரண்டி சீனி போட்டு கலக்கி விடவும்.2 நிமிடம் கழித்து இறக்கி வைத்து கறிவேப்பிலை போடவும். வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கூட்டில் சேர்க்கவும்.சுவையும் மணமும் நிறைந்த சுண்டைக்காய் கூட்டு ரெடி.
No comments:
Post a Comment