சப்பாத்தி, பூரிக்கு உருளைக்கிழங்கு குருமாவை ஒருமுறை இப்படி செய்யுங்க.. டேஸ்ட் செமயா இருக்கும்.
_சப்பாத்தி, பூரிக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கு சைடு டிஷ் தான் விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் வழக்கமாக செய்வது போன்று உருளைக்கிழங்கு சைடு டிஷ் செய்யாமல், ஒருமுறை ஹோட்டல் ஸ்டைலில் குருமாவை செய்யுங்கள்._
அதுவும் பேபி உருளைக்கிழங்கு கொண்டு குருமா செய்யுங்கள். இந்த ஹோட்டல் ஸ்டைல் பேபி உருளைக்கிழங்கு குருமா சப்பாத்தி, பூரியுடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் பேபி உருளைக்கிழங்கு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் பேபி உருளைக்கிழங்கு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
*தேவையான பொருட்கள்:*
*அரைப்பதற்கு
செய்முறை
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் தோல் நீக்கிய பேபி உருளைக்கிழங்கை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பேபி உருளைக்கிழங்கு குருமா தயார்.
No comments:
Post a Comment