Saturday, June 22, 2024

துவரம் பருப்பு சுண்டல்

துவரம் பருப்பு சுண்டல் செய்வது எப்படி .

 தேவை :    
குழையாமல் வேக வைத்த துவரம் பருப்பு - ஒரு கப்  
கடுகு – ஒரு டீஸ்பூன்  
காய்ந்த மிளகாய் – ஒன்று  
பச்சை மிளகாய் – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்   
கறிவேப்பிலை - சிறிதளவு  
தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்  
உப்பு - தேவையான அளவு.

 செய்முறை :

வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். 

அதனுடன்  வேக வைத்த துவரம் பருப்பு, உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்...

 *இதே போல் மற்ற பருப்பு வைத்தும் இதே முறையில் செய்யலாம் -*☝🏻

No comments:

Post a Comment