சில்லி காலிஃப்ளவர்
தேவையான பொருட்கள். :
செய்முறை. :
1. காலிஃப்ளவரை நன்றாக சுத்தம் செய்து கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு சிறிது உப்பும் சேர்த்து பத்து நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு; சோளமாவு மற்றும் 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்; மஞ்சள்தூள்; கரம் மசாலா தூள்;இஞ்சி பூண்டு விழுது; எலுமிச்சை சாறு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சிறிது தெளித்து நன்றாக கலக்கவும். காலிஃப்ளவரை இந்த மசாலாவில் சேர்த்து நன்றாக கலந்து குறைந்தது அரைமணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.
3. பிறகு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
4.இதை அப்படியே சாப்பிடலாம்.
5. சில்லி காலிஃப்ளவர் செய்ய அடிகனமான வானலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
6. அதில் 2 டீஸ்பூன்மிளகாய்த்தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் சீனி சேர்த்து நிறம் சிறிது மாறும் போது சதுரமாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
7. தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
8. சிறிது தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
9. இறுதியில் வறுத்த காலிஃப்ளவர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
10.நன்றாக கெட்டி தன்மை வரும் வரை வதக்கவும்.
11. இறுதியில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
12. ப்ரைட் ரைஸ் மற்றும் சப்பாத்தி யுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment