நெய் பொடி தட்டு இட்லி
இந்த இட்லி பெங்களூர் நகரங்கள்ல ரொம்ப பேமஸ், இப்போ சென்னை பாண்டிச்சேரின்னு எல்லா இடத்துலயும் கிடைக்குது, சமீபத்துல பாப்புலர் ஆன ராமேஸ்வரம் கஃபேவுக்கு போன வருடம் போயிருந்தோம் , எனக்கு அந்த பொடியெல்லாம் ஆச்சர்யம் இல்ல அது எப்படி அவ்வளவு நெய் உபயோகப்படுத்துராங்க அப்படிங்குறதான் , மசால் தோசையெல்லாம் நெய் குழந்தையா தலைக்கு குளிச்சி வெளியில வரும் 😅
சரி வாங்க தஞ்சாவூர் ஸ்பெஷல் இட்லி பொடி செய்யிறது எப்படின்னு பாப்போம் ...
தேவையான பொருட்கள் ...
கல் உப்பு தேவையான அளவு
எப்போதுமே விலையை பார்த்து மட்டும் மளிகை பொருட்களை வாங்கக்கூடாது, இன்றைக்கு மளிகை கடைகளுக்கு பல மாநிலங்களிலிருந்து மிளகாய் வருகிறது குறிப்பாக ஆந்திரா மிளகாய் அதிக காரம் நிறைந்ததாக இருக்கிறது, தஞ்சை பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் ஒரிஜினல் கேஷ்மீர் மிளகாய் கிலோ 800 வரை விற்பனை ஆகிறது, கேஷ்மீர் மிளகாய் என்று சொல்லி ஆந்திரா மிளகாயை வாடிக்கையாளர்களுக்கு தள்ளி விடுகிறார்கள் கூட்டு பெருங்காயம் போலியானவைகளே அதிக அளவில் கிடைக்கிறது , ராமநாதபுரம் மிளகாய் நமக்கு ஏற்றதாக இருக்கும் ...
மேல் சொன்ன மளிகை பொருட்களை பார்த்து பார்த்து வாக்குவது ஒரு பக்குவம் அதே போன்று வாங்கிய பொருட்களை வெயிலில் காயவைத்து மொட மொடவென்ற பக்குவதில்ல காயவைப்பது ஒரு பக்குவம் , பொருட்களை வாங்கியதும் நேரடியாக உபயோகப்படுத்துவது சிறப்பானது அல்ல ...
செய்முறை ..
1) நலெண்ணெய் ஊற்றி அதில் வர மிளகாய் மற்றும் கட்டி பெருங்காயத்தை வறுத்து எடுக்க வேண்டும்
2) பிறகு கடலை பருப்பை ஈரப்பதம் போகும் அளவுக்கு வறுத்து எடுக்க வேண்டும்
3) கருப்பு உளுந்தை சிவக்க வறுத்து பிறகு கருப்பு எள்ளையும் கருகாமல் வறுத்து எடுக்கவும்
4 ) பூண்டை தோலோடு நசுக்கி லேசாக எண்ணெய் விட்டு வதக்கி எடுத்துக்கொள்ளவும்
5) புழுங்கல் அரிசை பொரியும் வரை வறுத்து அத்தோடு கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்
6) கேஷ்மீர் மிளகாயை வெயிலில் நன்றாக காய வைத்து சேர்த்துக்கொண்டால் போதுமானது வறுபடும் போது நிறம் மாறலாம் ..
7 ) கடைசியாக கல் உப்பை சட்டியில் போட்டு சூடேற்றி எடுத்து வைத்துக்கொள்ளவும் ..
8 ) மிளகாயை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக தனியே அரைத்து எடுத்து பிறகு அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைக்க வேண்டியது தான் ...
9) அரைத்து முடித்த பிறகு காத்தாடி இல்லாத இடத்தில் பொடியை வைத்து சூடு குறைந்த பிறகு பாத்திரத்தில் மாற்றி வைப்பது சிறப்பு, அதிக நேரம் வெளியில் வைத்தால் வாசம் நன்றாக இருக்காது ..
இந்த பக்குவத்தில் அரைத்தால் தஞ்சாவூர் ஸ்பெஷல் இட்லி பொடி தயார்
கறிவேப்பிலை பொடி தேவைப்படுவோர் புழுங்கல் அரிசையை மட்டும் தவிர்த்துவிட்டு 200 கிராம் கறிவேப்பிலையை நன்றாக வெயிலில் காயவைத்து வறுத்து அரைத்தால் கறிவேப்பிலை பொடி தயார்.
No comments:
Post a Comment