கொத்தவரங்காய் பருப்பு உசிலி!
*🍱தேவையானவை என்ன*
அப்புறம்... என்ன செய்யணும்?
கொத்தவரங்காயை நன்றாகச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். பொடிசு பொடிசாக நறுக்கி, போதுமான தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேக வையுங்கள்.
அடுத்து துவரம் பருப்பையும் கடலைப் பருப்பையும் 1 மணி நேரம் ஊற வைத்து, மிளகாயுடன் சேர்த்துக் நன்றாக, கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அரைத்த அந்த விழுதை ஆவியில் நன்றாக வேக வையுங்கள்.
பிறகு ஆறியதும் நன்றாக உதிர்த்து விடுங்கள். கடாய் அல்லது வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிப்பதற்கான பொருட்களை ஒவ்வொன்றாக இப்போது அதில் சேருங்கள்.
பிறகு அரைத்த விழுதையும் சேருங்கள். பொன்னிறமாகும்வரை நன்றாக வதக்குங்கள். பிறகு வேக வைத்துள்ள கொத்தவரங்காயையும் சேர்த்து கிளறிவிட்டு சுவைத்துப் பாருங்கள். தேவைப்பட்டால், துளி உப்பு சேர்க்கலாம்.
சாம்பார் சாதம், ரசம் சாதம், வத்தக்குழம்பு சாதங்களுக்கு கொத்தவரங்காய் பருப்பு உசிலி செம காம்பினேஷன்.
No comments:
Post a Comment