வேலூர் ஆர்யாஸ்
ஒரு பசித்த வேளை கெட்ட வேளையில், பெங்களூரிலிருந்து காரில் சென்னை வரும் வழியில் வாணியம்பாடி சாய்சங்கீத் ஓட்டலைக் கடந்து வந்து விட்டேன்...
கொடுமையான பசி! வண்டியை கிரீன் சர்க்கிள் அருகே நிறுத்தியபோது கண்ணில் பட்டது ஆர்யாஸ் ஓட்டல்.
சாப்பிட உள்ளே நுழைந்தேன். மணி 3 ஆனதால் முதல் பந்தி சமையல் காலியாகி, சாதம் வடித்துக் கொண்டி ருந்ததால் காத்திருக்க வேண்டியதாயிற்று!
சுற்று முற்றும் ஆட்கள் சாப்பிட்டுக் கொண்டு இருந்த நபர்களில் ஒருவர் என்னைக் கவர்ந்தார்....
முதலில் மோர்க் குழம்பை சாதத்தில் போட்டு குழைத்து சாப்பிட்டார். இரண்டாம் தவணையும் மோர்க் குழம்பு கேட்டார்....
தட்டைச் சுற்றிலும் இருந்த மற்ற சைட் ஐட்டங்களில் ஊறுகாயைத் தவிர எதையும் தொடவே இல்லை....
மூன்றாம் முறையாக மோர் குழம்பு கேட்டு சாப்பிட்டார். சர்வரும் சளைக்க வில்லை.
கடைசியாக இருந்த சாதம்... ஆர்வத்துடன் கவனித்தேன்... நிச்சயம் இப்ப தயிர் தான்.....
தப்பு ! மறுபடியும் மோர்க்குழம்பு... நம்பினால் நம்புங்கள்.... மற்றதை எதுவும் தொடாமல் விட்டு விட்டார்....
கைகழுவி வெளியேறிய பின் சர்வரிடம் கேட்டேன்...
"ரெகுலர் கஸ்டமர் சார்! மோர்க்குழம்பு தவிர எதுவும் சாப்பிடுவதில்லை" என்றார்.
என் டர்ன் வந்தது. அப்படி என்னதான் மோர்க்குழம்பில் விசேஷம் என்று முதலில் அதைச் சாப்பிட்டேன்.....
அது மோர்க் குழம்பே இல்ல. ஒரு தேவ அமிர்தம்....
என் ஆராய்ச்சி புத்தி உடனே பொருட்களை பதிவு செய்து "நாளைக்கு இதை நீ வீட்டில் பண்ணனும் என்றது.
மறுநாள் அதே மோர்க் குழம்பை செய்து மனைவியை அசத்த வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.
காலையில் "இன்னைக்கு என் சமையல் ! சர்ப்ரைஸ்" என்றேன்...
மனைவி ஒதுங்க, முழு கிச்சன் என் வசமானது.
மோர்க்குழம்பை செய்து ருசி பார்த்து விட்டேன்.... அடடா! என்ன சுவை ! என்ன சுவை !
இனி செய்முறை!
தேங்காயத் துருவல், ஒரே ஒரு பச்சை மிளகாய், சீரகம் ஒரு ஸ்பூன், வாசனைக்கு நாலு மிளகு, நாலு தனியா, மறக்காமல் ஒரு பெரிய பட்டை இரண்டு கிராம்பு, ஒரு பிஞ்ச் வெந்தயம், இரண்டு ஸ்பூன் வறுத்த கடலை (பொட்டுக் கடலை), கொஞ்சம் மஞ்சள் தூள்....
நீர் விட்டு மிக்சியில் எதையும் வறுக்காமல் அரைக்கவும். துவையல் பதத்திற்கு அரைக்கவும்....
பின்னர் ஒரு பெரிய வெங்காயம், நாலு குறுக்கே வெட்டின பச்சை மிளகாய், (இஞ்சி சேர்க்கலாம்.... இல்லைன்னாலும் பரவாயில்லை),
ஒரு எண்ணிக்கை பூண்டை நறுக்காமல், நசுக்கி, தோலை பிரித்தெடுக்கவும்... நறுக்கின பூண்டை விட, நசுக்கிய பூண்டில் எஃப்பெக்ட் அதிகம்.
வாணலியில் கடுகு, கொஞ்சமாக பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து அதன் மேல் முதலில்
30 செகண்ட் பூண்டு, மிளகாயை வதக்கி அதன் பின் வெங்காயம் போட்டு கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்....
மோர்க்குழம்பில் இரண்டு விதமான மோரை உபயோகிக்கலாம். ஒன்று புளித்த மோர்.....
புளிப்பு சுவையைத் தானாகவே கொடுக்கும். (பெரும்பாலும் வீடுகளில் மீந்து போன புளித்த மோரை, வெடி மோராகவோ, மோர்க்குழம் பாகவோ செய்வதே வழக்கம்.... சிக்கனம் கருதி).
ஆனால் புதியதாக தயிரை சிலுப்பி செய்யும் மார்க் குழம்பே சாலச் சிறந்தது.... தயிரை நன்றாக சிலுப்பி கட்டிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்....
தேவையான தண்ணீரை இங்கே சேர்க்கவும். சமையல் செய்த பின் சேர்க்கா தீர்கள்....
மிக்சியில் அரைத்த கலவையை மோரில் கரைத்து, பின்னர் வாணலியில் வெங்காய வதக்க லோடு விட்டு, சிம்மரில் லேசாக கொதி வரும் வரை வதக்கவும்....
கடைசியாக, சிறிது கடுகு, பொருங்காயம் கறி வேப்பிலையை தேங்காய் எண்ணெயில் தாளிக்கவும்.... *கவனிக்க .... தேங்காய் எண்ணெய்....
என்னது ? உப்பு போட மறந்துட்டேனா?
கையில் ஒரு ஸ்பூன் டேஸ்ட்டுக்கு ஏற்ப உப்பைச் சேருங்கள்...
உப்பு ஒரு ஸ்டெப் கம்மியாக இருப்பதே மோர்க் குழம்பிற்கு அழகு !
*வேலூர் ஆர்யாஸ் மோர்க் குழம்பு* ☝🏻☝🏻☝🏻
No comments:
Post a Comment