டிபன் குருமாவை செய்வது எப்படி????
தேவையான பொருட்கள்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் மற்றும் பட்டாணி அதற்கு தேவையான அளவு உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை இவற்றை சேர்க்க வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் இரண்டாக கீறிய பச்சை மிளகாயை போட்டு சிறிதளவு புதினாவையும் சேர்த்து வதக்க வேண்டும்.
புதினா வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்குங்கள். தக்காளியின் தோல் சுருங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு அதன் பச்சை வாடை போகும் அளவிற்கு நன்றாக வதக்க வேண்டும். பிறகு மிளகாய் துளையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு நாம் வேக வைத்திருக்கும் காய்கறிகளை அதில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கொதிக்க வையுங்கள்.
இவ்வாறு கொதித்து கொண்டு இருக்கும் பொழுதே ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் தேங்காய், ஊற வைத்திருக்கும் கசகசா மற்றும் சோம்புவை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதை கொதிக்கின்ற குருமாவில் ஊத்தி நன்றாக கிளறி விட வேண்டும். ஒரு கொதி வந்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையையும் அதில் தூவி இறக்கி விட வேண்டும். மிகவும் ஆரோக்கியமான சத்து மிகுந்த காய்கறிகள் நிறைந்த டிபன் குருமா தயாராகி விட்டது.
No comments:
Post a Comment