மிளகு பொங்கல்
நாம இப்படி செய்கிற மிளகு பொங்கல் சாப்பிட்டா தூக்கமே வராது ...
பொதுவா மிளகு பொங்கலை மூன்றுவிதமாக செய்யலாம் உதிரி பொங்கல், வெண் பொங்கல், நெய் பொங்கல் - உணவகங்களில் செய்யப்படுவது இவைகளின் கலவை தான் நெய்க்கு பதில் வனஸ்பதி ( டால்டா ) சூரிய காந்தி எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது,
பொங்கல் விரைவாக விற்பனையாகும் பொருளல்ல அதனால் அதை சாம்பார் சாதத்தின் பக்குவத்தில் செய்து ஹாட் பாக்சில் வைத்து விடுவார்கள் அது நேரம் ஆக ஆக கெட்டி ஆகிக் கொண்டே வரும் அதனால் எண்ணெய் ததும்ப வைத்திருப்பார்கள் ...
கும்பகோணத்தின் டிகிரி காஃபி கும்பகோணம் கடப்பா இதற்கு அடுத்தபடியாக இந்த மிளகு பொங்கல் இங்கு பிரசித்தம் ,
பொன்னி பச்சை அரிசி, பாசிபருப்பு, பெருங்காயம், மிளகு, சீரகம், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை , மஞ்சள் தூள், நெய், கோல்டுவின்னர் சேர்த்து செய்யப் படும் இந்த மிளகு பொங்கலின் செய்முறை தனித் துவமானது ...
முதலில் பச்சை அரிசியையும் பாசிப்பருப்பையும் நன்றாக அலம்பி ஒன்றாக அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும் பிறகு பச்சை அரிசியையும் பாசிப்பருப்பையும் எடுத்த அதே கோப்பையில் 5 கோப்பை தண்ணீர் ஊற்றி கொஞ்சமாக பெருங்காயத்தூள் போட்டு மூன்று விசில் விட்டால் போதுமானது .
பிறகு விசில் அடங்கியதும் ,அடுப்ப பற்ற வைக்காமல் மஞ்சள் தூள், இஞ்சி, மீதமிருக்கும் பெருங் காயத்தூள், உப்பு, கறி வேப்பிலை, சீரகத்தை போட்டுக் கொள்ளவும், தூள் உப்பு பயன் படுத்துவது எளிதான ஒன்று,
பிறகு ஒரு எண்ணெய் சட்டியில் எண்ணெய் மற்றும் நெய்யை விட்டு அதில் மிளகு வெடித்த பிறகு முந்திரியை பதமாக வறுத்து தயார் செய்து வந்திருந்த குக்கரில் கொட்டி கிண்ட வேண்டியது தான் - தரமான மிளகு பொங்கல் தயார் ....
மிளகு பொங்கலுக்கு இன்றும் சாம்பார், தேங்காய் சட்னிக்கு மாற்று எதும் தரப்படுவதில்லை சூடான மொறு மொறு மெது வடையுடன் மிளகு பொங்கல் ஆகச்சிறந்த காமினேசன் ...
தஞ்சை ரயிலடியில் ஒரு உணவகத்தில் மாலை நேரங்களிலும் மிளகு பொங்கல் கிடைக்கும் ஆகா 😍
தூக்கம் வருமா வராதா??
நாம செய்யற மிளகு பொங்கல் சாப்பிட்டா தூக்கம் வர்ராததுக்கு காரணம் டால்டா சேர்க்காமல் செய்யறது
அதனால தான் - முதல் ரவுண்டு இரண்டாவது ரவுண்டு வரைக்கும் ஓக்கே அதுக்கு மேல பேச்சின்னா யார் செஞ்ச பொங்கலா இருந்தாலும் Eat and driving வழக்குல மாட்டிப்பிங்க ஜாக்கிரதை 😂😂☝🏻
No comments:
Post a Comment