பூரி-சாகு
திருவல்லிக்கேணிதிருநெல்வேலி அல்வாஹவுஸ் ஃபேமஸ்#
நம் அனைவருக்கும் மிகவும்விருப்பமான ஒரு டிபன் என்றால் அது பூரி. காலை ப்ரேக்ஃபாஸ்ட் ஆக இருந்தாலும் சரி, மாலை டிபனாக இருந்தாலும் சரி,
ஓட்டலில் ஆர்டர் பண்ணி சாப்பிடுவது பூரியாகத்தான் இருக்கும். வீட்டில் இரவு நேரத்தில் டின்னர் பூரி செய்து அதற்கு பொட்டேட்டோ, குருமா, பயத்தம் பருப்பு தால் என்று பலவகை செய்வார்கள்.
சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெரு பைக்கிராப்ட்ஸ் ரோடு கார்னரில் முன்பு திருநெல் வேலி அல்வா ஹவுஸ் என்று ஒன்று இருந்தது.
அங்கு ஸ்வீட் ஸ்டாலாக இருந்தாலும் சில டிபன் அயிட்டம் களும் உண்டு.
இரவு பத்து பத்தரை மணி வரைக்கும் சாயங்கால வேளையில் இருந்து அவர்களுடைய பூரி சாகு நன்கு பிச்சுட்டு ஓடும்.
நாங்கள் அப்ப சிறுவர்கள், நிறைய தடவை சாப்பிட்டு இருக்கோம். அந்த பூரி சாகுவிற்கு நான் அடிமை.
அந்த ரெசிபி இப்போது உங்களுக்காக தருகிறேன்.
தேவையான பொருட்கள் :-
செய்முறை :-
- வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் சீரகத்தையும், அரை ஸ்பூன் கடுகையும் போடவும்.
- கடுகு சீரகம் பொரிந்தவுடன் பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். பின்னர் கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும். மிளகாய் வதங்கியவுடன் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.
- உருளைக் கிழங்கை கொஞ்சம் பெரிய துண்டாக வெட்டி கொள்ளவும். 3 துண்டங்களை கையால் நன்கு மசித்து வைக்கவும்.
- தக்காளி பாதி வதங்கிய பின், மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்க்கவும். தண்ணீர் விட்டு விட்டு தக்காளி நன்று உரு தெரியாமல் வதக்கிக் கொள்ளவும்.
தக்காளி நன்கு வதங்கியபின், நறுக்கி வைத்துள்ள உருளைக் கிழங்கையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின்பு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து, உப்பு உரப்பு மசாலா சுவை பார்த்து, சரியான பதத்திற்கு கொதிக்கவைத்து, பொடியாக நறுக்கிய கொத்த மல்லி தூவி இறக்கவும்.
சுவையான சாகு தயார். பூரிக்கு தொட்டுக்கொள்ள செம டேஸ்டா இருக்கும்.
குறிப்பு:-
உருளைக்கிழங்கு துண்டம் பெரிதாக இருந்தால் கரண்டியால் வெட்டி சிறிதாக்கி கொள்ளவும்.
நான் கொஞ்சம் மைல்டாகத்தான் பூண்டு சேர்த்திருக் கிறேன், இன்னும் கொஞ்சம் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்றால் சேருங்கள்.
நீங்களும் செய்து பார்த்துவிட்டு பிடித்து இருந்ததா என்று சொல்லவும்.
⚘⚘🙏நன்றி🙏⚘⚘
#
No comments:
Post a Comment