Saturday, June 29, 2024

டிபன் சாம்பார் மசாலா பொடி

 டிபன் சாம்பார் மசாலா பொடி எப்படி தயார் செய்யறது.

பொதுவா டிபன் சாம்பார்ல மல்லிதூள் கொஞ்சம் தூக்கலா இருக்கும். அது கூட ஒரு சின்ன பட்டை துண்டு சேர்த்துகிட்டிங்கன்னா இன்னும் நல்ல வாசனையா இருக்கும்.

தேவையான பொருட்கள் :

மல்லி விதை - 4 டேபிள் ஸ்பூன்
ஜீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுந்து - 1/2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீ ஸ்பூன்
மிளகு - ஒரு டீ ஸ்பூன்
வரமிளகாய் - 15
காஷ்மீர் மிளகாய் - 2
மஞ்சள் தூள் - அரை டீ ஸ்பூன்
கட்டி பெருங்காயம் - சிறிய துண்டு
சிறிய பட்டை துண்டு
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி

மல்லி, ஜீரகம், கடலை பருப்பு, உளுந்து, வெந்தயம், மிளகு, பட்டை துண்டு இது எல்லாத்தையும் ஒரு சட்டில சேர்த்து நல்லா வறுத்து எடுத்துக்கோங்க. இந்த பொருட்களை வறுக்கும் போது எண்ணெய் சேர்க்காதிங்க.

அடுத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் சட்டில விட்டு வர மிளகாய், காஷ்மீர் மிளகாய், பெருங்காயம் எல்லாத்தையும் நல்லா வறுத்து எடுத்துக்கோங்க. நான் எப்பவும் சொல்றது போல தூள் பெருங்காயத்தை விட கட்டி பெருங்காயம் சேர்த்தாதான் சாம்பார் நல்ல மணமா இருக்கும். கட்டி பெருங்காயத்தை அப்படியே அரைக்க முடியாது. அதுனால சட்டில வறுத்துட்டு அரைச்சி பாருங்க.

இப்போ வறுத்து வச்சிருக்க எல்லா பொருட்களும் சூடு ஆறினதும் அது கூட மஞ்சள் தூள் சேர்த்து மிக்சி ஜார்ல போட்டு நல்லா அரைச்சிடுங்க.

அவ்வளவுதான்.... டிபன் சாம்பார் பொடி தயார். இதை வச்சி டிபன் சாம்பார் செஞ்சி பாருங்க... அசத்தலா இருக்கும்... 😍

No comments:

Post a Comment