கனடாவின் நயாகரா
188 அடி உயரம்…2500 அடி அகலம்…இயற்கை தனக்கென்று பிரத்யேகமாக அமைத்துக் கொண்ட பிரமாண்ட, பிரமாண்ட, பிரமாண்ட செட்…நயாகரா அருவிகள் ! (ஷங்கர் + ராஜமௌலி+ ஸ்பீல்பெர்க் காம்போ ஒரு படமெடுத்தால் எப்படி இருக்கும்??)
இந்த மூன்று இயக்குனர்கள் போலவே மூன்று அருவிகளைக் கொண்டதுதான் நயாகரா.
வடக்கு அமெரிக்காவின் கிரேட் லேக்ஸ் என அழைக்கப்படும் ஐந்து மிகப்பெரிய ஏரிகளில் நான்கின் (சுப்பீரியர், மிச்சிகன், ஹ்யூரான், ஈரி) நீரைச் சுமந்து வரும் நயாகரா நதி கனடா ஒண்டாரியோவிற்கு அமெரிக்காவின் நியூயார்க்கிற்கும் நடுவில் சற்றே தடுக்கி விழுந்ததன் விளைவே நயாகரா அருவிகள்.
‘ஜர்னி டு தி ஃபால்’…அதாவது அருவிக்கு மிக அருகில் செல்லும் படகு சவாரிக்கு டிக்கெட்டுகள் வாங்கி போகலாம். வெகு தூரத்தி லிருந்து பார்க்கும் போதே மெய் சிலிர்க்க வைக்கும் நயாகரா.
அங்கே கொடுக்கப் படும் வாட்டர் – ப்ரூஃப் உடுப்புகளை மாட்டிக்கொண்டு படகில் ஏறி போக வேண்டும். ‘’முதலில் உங்கள் இடதுபுறம் வருவது தான் ரெயின்போ ப்ரிட்ஜ்.’’
கனடாவும் அமெரிக்காவும் ‘நண்பேன்டா’ என்று சொல்லிக் கொண்டு இந்த பாலத்தின் வழியாக இணைகின்றன.
அமெரிக்கா நயாகராவிலிருந்து ஐந்து நிமிடங்கள் பாலத்தின் மீது நடந்தோ சைக்கிளிலோ இலவசமாக கனடாவிற்கு வந்துவிடலாம்.
கனடாவிலிருந்து பாலத்தை கடக்க ஒரு டாலர் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. அமெரிக்கா/கனடா குடியுரிமையோ விஸாவோ இல்லா தவர்களுக்கு ‘எங்க ஏரியா உள்ள வராதே!!’
“இப்போது நேராக பாருங்கள்..” அந்த திசையில்..’புன்னகை மன்னன்’ படத்தில் வரும் அதிரப்பள்ளி அருவியை ஐமேக்ஸ் தியேட்டரில் மெகா சைஸில் பார்ப்பது போல குதித்து குதூகலித்துக் கொண்டிருப்பதை பார்க்கலாம்
அமெரிக்கன் நயாகரா அருவியும் ‘ப்ரைடல் வீல்’ அருவியும். இவர்கள் நம் மீது தெளிக்கும் குளிர்ந்த சாரல்களை ரசிக்கும் நேரத்தில்…இவர்களையே விழுங்கும் ராட்சத அருவியை நோக்கி படகு நகரும்.
‘ஹார்ஸ் ஷூ’ அருவி என்ற பெயர் கொண்ட கனடாவின் நயாகரா…உலகின் எட்டாவது அதிசயம் என கருதப்படும் பேரழகு .
ஒரு வினாடிக்கு முப்பது லட்சம் லிட்டர் தண்ணீர் கொட்டுவதை அருகில் சென்று பார்க்கும் போது மனதுக்குள் பிரமிப்பு கலந்த மிரட்சியை உணரலாம்.
நம்மைச் சுற்றிலும் கண்ணுக்கு தெரிவதெல்லாம் அருவி..அருவி மட்டுமே. சொர்க்கத்தில் ஷவர் பாத் எடுத்தால் இப்படித் தான் இருக்குமோ?? கவலைகள் மறந்து கனவுலகில் மிதக்கும் அந்த நிமிடங்கள்…
ஒரே வரியில் சொல்வதென்றால்..’கடவுள் இருக்கான், என்பது தான்.
நயாகரா அருவிகளின் பின்பக்கத்தி லிருந்து நீரூற்றுகளைப் பார்க்கும் ‘ஜர்னி பிஹைண்ட் தி ஃபால்’, அருவிகளை டாப் ஆங்கிளில் பறந்து பறந்து ரசிக்கும் ஹெலி காப்டர் ரைட், அருவிகளின் மீது அந்தரத்தில் தொங்கிச் செல்லும் ‘ஜிப்லைன்’ சாகசம், வேவ்ஸ் வாட்டர் பார்க், நயாகரா வரலாற்று அருங் காட்சியகம்… என நயாகரா நகரத்தில் தங்கி இரண்டு நாட்கள் சுற்றிப் பார்க்குமளவுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
நயாகராவைப் பற்றி ஒரு குட்டி ஸ்டோரி…
(கறுப்பு வெள்ளையில் கற்பனை செய்து கொள்ளவும்…)
கிழக்கே உதிக்கும் சூரியன், அதி காலை குயில்களின் கச்சேரி போல அருவியின் ஆர்ப்பரிக்கும் சப்தமும் நயாகரா மக்களின் வாழ்வில் ஓர் அங்கமாகி விட்டது.
ஆனால்… மார்ச் 30, 1848 அன்று…
அந்த விடியல் அவர்களுக்கு நிசப்தமான விடியலாக இருக்கும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
ஆம் அன்று ‘’நயாகரா முற்றிலும் வற்றிவிட்டது.. தண்ணீரே இல்லை…’’ என குழப்பத்துடன் மக்கள் கலங்கினர். ‘உலகம் அழிவதற்கான அறி குறிதான் இது’ என எண்ணி கிருஸ்தவ தேவாலயங்களில் கூட்டுப் பிரார்த்த னைகள் நடத்தினர்.
நயாகரா நதியின் நீரை ஆதாரமாகக் கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள் வேலையில்லாமல் மூடப்பட்டே இருந்தன.
மார்ச் 31, 1848…
24 மணி நேர உண்ணாவிரதத்தை தண்ணீருடன் முடித்துக் கொண்டாள் நயாகரா.
மக்களுக்கு அப்போதுதான் உயிரே வந்தது போல் இருந்தது.
நயாகரா நதியின் நீரைத் தடுத்துக் கொண்டிருந்த பனிப்பாறைகள் மனமுருகி வழி விட்டதால்…மீண்டும் நயாகரா!!!
வரலாற்றில் இப்படியொரு அதிசயம் நிகழ்ந்தது என்பதை வருங்கால தலை முறையினர் நம்ப வேண்டும் என்பதற்காக…மக்களிடம் ஊர் பெரியவர் தாமஸ் ப்ராக் ஃபுல்லர் சாட்சி கையெழுத்துகள் வாங்கினாராம்.
‘
No comments:
Post a Comment