Thursday, June 13, 2024

மசாலா சப்பாத்தி

 மசாலா சப்பாத்திசெய்வது எப்படி??? 👇👇

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு - அரை கிலோ
உருளைக்கிழங்கு - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேகரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
கறி மசாலா பொடி - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லித் தழை - சிறிது
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரைத் தேக்கரண்டி
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

🍀கோதுமை மாவுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்.

🍀 மற்றும் கிராம்பினை பொடித்துக் கொள்ளவும்.

🍀உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.

🍀அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, சீரகம், பட்டை கிராம்பு பொடி போட்டு பொரிய விடவும்.

🍀பொரிந்ததும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.

🍀பின்னர் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கி விட்டு வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து விட்டு சேர்த்து வதக்கவும்.

🍀அதனுடன் மஞ்சள் தூள், கறி மசாலாப் பொடி, உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் எண்ணெய் ஊற்றி வதக்கவும்.

🍀சிறிது நேரம் கழித்து கொத்தமல்லி தழையை போட்டு இறக்கி ஆற வைக்கவும்.

🍀மசாலாவை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

🍀மாவையும் சிறிய உருண்டையாக உருட்டி சப்பாத்தி கல்லில் வைத்து வட்டமாக கையால் தட்டி அதன் நடுவில் மசாலாவை வைத்து மூடி மீண்டும் உருட்டவும்.

🍀சப்பாத்தி கல்லில் உருண்டையை வைத்து, வட்டமாக தேய்த்து எடுக்கவும்.

🍀தோசைக்கல்லில் போட்டு சிறிது எண்ணெய் விட்டு, திருப்பி போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.

🍀சுவையான மசாலா சப்பாத்தி தயார்.

No comments:

Post a Comment