Sunday, June 23, 2024

உடுப்பி சாம்பார்

 உடுப்பி சாம்பார்

தேவையான பொருட்கள்

முருங்கைக்காய், கத்தரிக்காய், சௌசௌ - 1/4 கி 

சின்ன வெங்காயம் (முழுதாக) - 10 
தக்காளி - 1 
பச்சை மிளகாய் - 2 
புளிச்சாறு - 2 ஸ்பூன் 
கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு 
கடுகு - 1/2 ஸ்பூன் 
வரமிளகாய் - 2 
பெருங்காயம் - 1/4 ஸ்பூன் 
வெல்லம் - 1/2 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
உப்பு 
எண்ணெய் 
வறுத்து அரைக்க 
உளுந்து - 2 ஸ்பூன் 
சீரகம் - 2 ஸ்பூன் 
மல்லி - 3 ஸ்பூன் 
வெந்தயம் - 1/2 ஸ்பூன் 
வர மிளகாய் - 4 
துருவிய தேங்காய் - 1 கப் 

செய்முறை 

காய்களை மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும். 

புளிகரைசலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை மூடியிட்டு வைக்கவும். 

பின்னர் அரைத்த தேங்காய் விழுது, வெல்லம், உப்பு, தண்ணீர் சேர்க்கவும். 

விழுது வெந்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்து ஒரு கொதிவிட்டு கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் தாளிக்கவும். 

கொத்தமல்லி தூவி இட்லி, தோசை, சாதத்துடன் பரிமாறவும்

No comments:

Post a Comment