Thursday, June 27, 2024

உருண்டை குழம்பு

 உருண்டை குழம்பு

தேவையான பொருட்கள்

குழம்புக்கு:

கடுகு சீரகம் 1/2 க.
வெந்தயம் 1/4தே.க
வெங்காயம் 4
தக்காளி 4
கருவேப்பிலை 2கொத்து
புளி - எலுமிச்சை அளவு
குழம்பு மிளகாய் தூள் 3கரண்டி
உப்பு தேவையான அளவு 
தேங்காய் துருவல் 1மூடி சோம்பு 1ஸ்பூன்

 உருண்டைக்கு அரைக்க:

  க.பருப்பு 1/3,பா. பருப்பு (4மணி நேரம் ஊற வைக்கவும்) இஞ்சி 1/2இன்ச், சோம்பு 1ஸ்பூன் அனைத்து பொருளையும் சேர்த்து  கொரகொரப்பாக மசால் வடைக்கு அரைப்பது போல அரைத்து கொள்ளவும். பின்பு அரைத்த விழுதை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் முருங்கை (அ) கருவேப்பிலை  சேர்த்து   2 -வெங்காயத்தை  பொடியாக நறுக்கி சேர்த்து பிசைந்து சிறு சிறு பந்துகளாக உருட்டி வைத்து கொள்ளவும்.

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து தாளித்து அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மசிந்ததும் புளி கரைசல் உப்பு மிளகாய் தூள் சேர்த்து கலந்து நன்கு கொதிக்க விடவும். பின்பு தேங்காய் சோம்பு 1க சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி உருட்டி வைத்த உருண்டைகளை குழம்பில் போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும் உருண்டை வெந்து மேலே மிதக்கும். 5 நிமிடத்தில் ஸ்டவ் ஆஃப் செய்து பரிமாறவும்

(கூடுதல் சுவைக்கு ஒரு உருண்டை மாவை குழம்பில் பொடும் முன்னர் தண்ணீரில் கரைத்து குழம்பில் சேர்க்கவும்)

No comments:

Post a Comment