முள்ளங்கி சாம்பார் செய்வது எப்படி???? 👇👇👇👇👇👇👇👇👇👇👇❣️❣️👇👇👇
தேவையான பொருள்கள்
முள்ளங்கியை வட்டமாக வெட்டி பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு ஓரங்கள் நிறம் மாறும் வரை வதக்கவும்.
குக்கரில் பருப்புகள், சிறிது சீரகம், தக்காளி 2 1/2 கப் நீர் சேர்த்து 4 விசில் வைக்கவும். (அவரவர் குக்கரை பொறுத்து வைக்கவும்)
வதக்கிய முள்ளங்கியில் சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அடுத்து தூள் வகைகளை சேர்த்து கொதித்ததும், புளித்தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். வேக வைத்த பருப்பை முள்ளங்கியுடன் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பெருங்காயத் தூள் சேர்க்கவும். தாளித்ததை சாம்பாரில் கொட்டி கலக்கி விடவும்.
சுவையான முள்ளங்கி சாம்பார் ரெடி. சாதம், இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும்.
முள்ளங்கியை இப்படி தனியாக வதக்கி தான் சேர்க்க வேண்டும். வெங்காயத்துடன் வதக்கினால் சரியாக வதங்காமல் வயிறு உப்புசம் ஏற்படும்
No comments:
Post a Comment