Sunday, June 2, 2024

இடியாப்ப கிச்சடி

 இடியாப்ப கிச்சடி

☝🏻👇🏻

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி - 
1/4 கிலோ
தேங்காய் துருவல் - 1/4 கோப்பை
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி - 1/4 துண்டு
மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கருவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
கடுகு - 1/4 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1/4 தேக்கரண்டி
ஊளுந்து - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் -2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

 செய்முறை

1. அரிசியை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

2. பிறகு ஊறிய அரிசியை நன்றாக அலம்பி அதனுடன் துருவிய தேங்காயைப் போட்டு அதனை மைய அரைத் தெடுக்கவும்.

3. பிறகு இட்லி பாத்திரத்தில் விட்டு இட்லியாக வார்க்கவும்.

4. இட்லியை சூடு ஆறுவதற்குள் இடியாப்ப குழலில் இட்டு பிழிந்து எடுத்து வைக்கவும்.

5. பெரிய வெங்காnயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

6. இஞ்சியையும்,  விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

7. வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, ஊளுந்து, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.

8.வெங்காயத்தை போட்டு வதங்கியதும், இஞ்சி, விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

9. பின்னர் மசாலாத்தூள், மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

10. பிறகு இதில் ஆறிய இடியாப்பத்தை போட்டு நன்றாக கிளறவும்.

11. பிறகு நறுக்கிய கொத்தமல்லித் தழையைப் போட்டு இறக்கவும்.

 *இடியாப்ப கிச்சடி தயார்* ☝🏻☝🏻

No comments:

Post a Comment