அரைச்சு விட்ட சாம்பார்!
இதை அரைச்சு விட்ட சாம்பார் அல்லது இடிச்ச சாம்பார் என்றும் கூறுவார்கள். இது பாரம்பரிய வழக்கப்படி கையிலேயே மசாலாக்களை இடித்து , அரைத்து சமைப்பதால் இப்படி அழைப்பதுண்டு. சோறு, இட்லி, தோசை போன்று உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். நீங்களும் சமைத்துப் பாருங்கள்.
🍱தேவையான பொருட்கள்
வறுக்க தேவையான பொருட்கள்
🥘தாளிக்க தேவையான பொருட்கள்
🥗சமையலுக்கு முன் தயாராக வைத்துக் கொள்ள வேண்டியவை🥗
புளியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வையுங்கள். பின் புளிக்கரைசலை தனியாக பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
காய்கறிகளை சம அளவில் தேவைக்கு ஏற்ப நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
குக்கரில் துவரம் பருப்பு மைய மசியுமாறு 5 விசில் வரை விட்டு இறக்கவும்.
கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டிவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும். சூடு ஆறியதும் மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.
🍴செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகை தாளிக்கவும். அடுத்ததாக வெந்தையம் , பெருங்காயப் பொடி, கருவேப்பிலை சேர்க்கவும்.
அடுத்ததாக தோல் உறித்த சாம்பார் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக காய்கறிகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின் புளிக் கரைசல், மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்க்கவும். அதில் காய்கறிகள் வேகும் வரைக் கொதிக்க விடவும்.
காய்கறிகள் வெந்ததும், வேகவைத்த துவரம் பருப்பு, மிக்ஸியில் அரைத்த பொடி ஆகியவற்றை சேர்த்து நன்குக் கலக்கி விடவும். அதோடு ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.
சிறு தீவில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். கொஞ்சம் கெட்டியான பதம் வந்ததும் சாம்பாரை இறக்கி விடவும். சாம்பார் அதிக கட்டியாகவும் இருக்கக் கூடாது.
தற்போது அருசுவையான அரச்சு விட்ட சாம்பார் ரெடி.
No comments:
Post a Comment