Tuesday, June 4, 2024

செட்டிநாடு மிளகாய் சட்னி

செட்டிநாடு மிளகாய் சட்னி  செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்

காய்ந்த மிளகாய் - 10
பூண்டு பல் - 3
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு
தாளிக்க:
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை

 செய்முறை

தேவையானப் பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்

தேவையான பொருட்கள் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்

சட்னி அரைத்தல் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,கறி வேப்பிலை தாளித்து அரைத்த சட்னியை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும். 

சட்னி தாளித்தல் சுவையான காரசாரமான செட்டிநாடு மிளகாய் சட்னி தயார்

இட்லி, தோசையுடன் பரிமாறவும்.

No comments:

Post a Comment