Friday, June 21, 2024

கீரை மிளகூட்டல்

 கீரை மிளகூட்டல்  செய்வது எப்படி???? 

தேவையான பொருள்கள்

ஸ்பினாச் - ஒரு கட்டு
துவரம் பருப்பு - ஒரு சிறிய கப்
வெங்காயம் - பாதி
தக்காளி - பாதி
அரைக்க :
சீரகம் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
தனியா - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப்

தாளிக்க:

கடுகு, சீரகம்
பெருங்காயம் - சிறிது
காய்ந்த மிளகாய் - 3
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை

கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து வைத்துக் கொள்ளவும். துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கீரை, வெங்காயம், தக்காளி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்

கீரை வெந்ததும் வேக வைத்த பருப்பு, அரைத்த விழுது எல்லாவற்றையும் சேர்த்து ஒரு கொதி விடவும்

வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றை போட்டு தாளித்து கீரை கலவையுடன் சேர்க்கவும்.

சுவையான கீரை மிளகூட்டல் தயார்

No comments:

Post a Comment