Thursday, June 6, 2024

தஞ்சாவூர் சாம்பார் பொடி

 தஞ்சாவூர் சாம்பார் பொடி ....

தஞ்சாவூர் சாம்பார் பற்றி ஒரு பதிவில் பேசியிருந்தோம் அப்படி சுவை மிக்க தஞ்சாவூர் சாம்பாரை செய்ய பயன்படுத்தப்படும் சாம்பார் பொடியை பற்றிய செய்முறையை பதிவு செய்ய நிறைய பேர் Comments செய்திருந்தார்கள் .. அவர்களுக்காகவே இந்த பதிவு ...

மிளகாய் வத்தல் - 1/4 கிலோ
கொத்தமல்லி விதை  - 300 கிராம்
சீரகம் - 100 கிராம்
துவரம் பருப்பு - 50கிராம்
கடலைப் பருப்பு - 50 கிராம்
மிளகு - 25 கிராம்
வெந்தயம் - 25 கிராம் 

செய்முறை 

முதலில் மிளகாய் வத்தலை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். கொத்தமல்லி விதை , சீரகம், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை தனித் தனியாக ஒரு வாணலியில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். கருக விடாமல் மிதமான தீயில் வைத்து வறுத்து கொள்ளவும். வத்தல் காய்ந்ததும் எல்லாப் பொருள்கள்களையும் ஒன்றாக சேர்த்து மெசினில் கொடுத்து அரைக்கவும். இந்த சாம்பார் பொடியை சாம்பார், புளி குழம்பு, கூட்டு மற்றும் அனைத்து குழம்பு வகைகளுக்கும் உபயோகிக்கலாம். 

கட்டிப்பெருங்காயத்தை வறுத்து சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும். 

No comments:

Post a Comment