Saturday, June 29, 2024

தஞ்சாவூர்ஸ்பெஷல்

 முன்னாடி தஞ்சாவூர் பக்கம் உளுந்துவடையை  தயிர் வடையின்னு தான் சொல்வாங்க அப்புறம்தான் தேங்காய் சட்னி வைச்சு சாப்பிட்டாங்க அப்புறம் பாயாசத்தோடு சேர்த்து சாப்பிட்டோம். அப்புறம் சென்னையில் தான் இது சாம்பார் வடையா மாறிடுச்சு காரச் சட்னி  வைச்சும் அங்கே சாப்பிடுறாங்க.

நிறைய பேருக்கு உளுந்துவடை ரொம்ப பிடிக்குது. இப்படி செய்து பாருங்களேன் இன்னும் ரொம்ப பிடிக்கும் உழுந்து..உழுந்து சாப்பிடுவாங்க அட நிஜமா தாங்க நீங்க வேணா  ட்ரைப் பண்ணிப் பாருங்க அப்புறம் நீங்களும் உழுந்துடுவிங்க. 

300 கிராம் உளுந்து (2 கப்)
3 டீஸ்பூன் பச்சரிசி

இரண்டையும் தனித்தனியாக 3 மணி நேரம்  ஊர வைத்து லேசா தண்ணீர் விட்டு அரைச்சிட்டு

1 பெரிய வெங்காயம்
3 பச்சை மிளகாய்
1 ஸ்பூன் மிளகு
கொத்தமல்லி தழை
பெருங்காயத்தூள் சிறிது, உப்பு சிறிது. நன்றாக மாவை கைவிட்டு பிசைந்து உருட்டி நடுவில் ஒரு ஓட்டையப் போட்டு எண்ணெய்யில் போட்டிங்கன்னா புஸ் புஸ்னு உப்பி வரும் உள்ள.பார்த்தால் பஞ்சு வெளியே பார்த்தா சும்மா மொறு மொறுன்னு இருக்கும். உளுந்து வடை பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. கூடவே தேங்காய் பொட்டுக்கடலை பச்சைமிளகாய், இஞ்சி உப்பு வைச்சு அரைச்சு ஒரு தேங்காய் சட்னி வைச்சி சாப்பிட்டிங்கன்னா சாப்பிட்டுகிட்டே இருப்பிங்க. 

உளுந்து வடைக்கு ஏன் மெதுவடையின்னு சொல்றாங்கன்னு தெரியல ஒரு.வேளை மென்மையா பஞ்சுமாதிரி இருக்கிறதால மெதுவடையின்னு சொன்னாங்களோ என்னவோ. காரணம் என்னவா இருந்தால் என்ன சாப்பிட ருசியா  இருந்தால் சரி. நம்ம வாழ்க்கைதான் மெதுவடையில் கிடக்கிற மிளகு மாதிரி ஆகிடுச்சேன்னு வருந்தாம அதை மருந்தா எடுத்து சாப்பிட்டு போங்க அவ்வளவு தாங்க விஷயம்.

தஞ்சாவூர்ஸ்பெஷல் பாரம்பரியசமையல்

No comments:

Post a Comment