Monday, June 10, 2024

எலுமிச்சம் பழ ரசம்

 எலுமிச்சம் பழ ரசம்

தேவையான பொருள்கள்:

1. பாசிப் பருப்பு
2. துவரம் பருப்பு
3. உப்பு
4. ரசப் பொடி
5. பெரிய தக்காளி
6. சிறிய எலுமிச்சம்பழம்
7. தனியா பொடி (மல்லிப் பொடி)
8. சீரகம்
9. மிளகு
10. மிளகாய்ப் பொடி
11. கடுகு
12. அச்சு வெல்லம்

 செய்முறை

1. இரண்டு பருப்புகளையும் நன்கு கழுவி, சுத்தம் செய்து அரை ஆழாக்குத் தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும்.

2. தக்காளிப் பழத்தை நன்கு துண்டுகளாக வெட்டி ஒரு ஆழாக்குத் தண்ணீரில் நன்கு பிசைந்து அதில் உப்பு, தயாரித்து வைத்து இருக்கும் ரசப் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, அரை அச்சு வெல்லக் கட்டி ஆகிய இவற்றை எல்லாம் போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

3. பின் வேக வைத்த பருப்பை மத்தினால் நன்றாக் கடைந்து மேற்கண்ட பதார்த்தத்துடன் சேர்த்து ஒரு கொதி வந்த மாத்திரத்தில் இறக்கி வைத்து எலுமிச்சம் பழத்தை பிழிந்து உடன் கொத்துமல்லி, கருவேப்பில்லை சேர்க்கவும்.

4. பின்னர் கடுகையும், சீரகத்தையும் தாளித்துக் கொட்டலாம்.

5. இதோ இப்போது சுவையான எலுமிச்சை பழ ரசம் தயார்.

No comments:

Post a Comment