தக்காளி தோசை
🥗அம்மா சமையல்🥗
1. பச்சரிசி - ஒரு கப்
2. தக்காளி - 2
3. துவரம் பருப்பு - கால் கப்
4. பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
5. காய்ந்த மிளகாய் - 3
6. கறிவேப்பிலை - ஒரு கொத்து
7. பெருங்காயத் தூள் - கால் டீஸ்பு+ன்
8. உப்பு - தேவைக்கேற்ப
🍅 ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, தக்காளி ஆகியவற்றை ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த பொருட்களினை மிக்சியில் நன்றாக தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
🍅 வெங்காயத்தினை எண்ணெயில் வதக்க வேண்டும். அரைத்த மாவுடன் வதக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு நன்றாக கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் எண்ணெய் தடவிய பிறகு மாவினைப் பரவலாக ஊற்ற வேண்டும்.
🍅 தோசைக்கல்லில் மாவை ஊற்றி தேய்க்க கூடாது. மேலே எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
🍅 இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : அனைத்து சட்னி வகைகளும் நன்றாக இருக்கும். குறிப்பாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கொத்தமல்லி சட்னி, சாம்பார்.
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
No comments:
Post a Comment