சேப்பங்கிழங்கு மோர் குழம்பு
மூலப்பொருள் :-
1. கெட்டியான புளித்த தயிர் - 1 கப்
2. பூசணிக்காய் - 1 கப்
3. சேப்பங்கிழங்கு - கால் கிலோ
4. வெண்டைக்காய் - 100 கிராம்
5. தேங்காய் துருவல் - கால் கப்
6. சீரகம் - அரை டீஸ்பூ+ன்
7. காய்ந்த மிளகாய் - 1
8. மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
9. கடுகு - அரை டீஸ்பூன்
10. உப்பு - தேவைக்கேற்ப
11. வெந்தயம் - அரை டீஸ்பூன்
12. கறிவேப்பிலை - 1 கொத்து
13. கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி அளவு
14. எண்ணெய் - தேவைக்கேற்ப
விளக்கம் :-
1. தயிருடன் மஞ்சள், உப்பு சேர்த்து வைக்கவும். தேங்காய், சீரகம், மிளகாயை பச்சையாக அரைத்து தயிhpல் கரைக்கவும்.
2. பூசணிக்காய், சேப்பங்கிழங்கை வேக வைத்து தயிர் கலவையில் சேர்க்கவும். வெண்டைக்காயை எண்ணெய் ஊற்றி வதக்கி கலவையில் கலக்கவும்.
3. இந்த கலவையை 2, 3 நிமிடம் சூடாக்கி உடனே இறக்கிவிடவும்.
4. இதில் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும். இப்போது சூடான சேப்பங்கிழங்கு மோர் குழம்பு ரெடி.
5. இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதம், பொரியலுக்கு வைத்து சாப்பிடலாம்.
No comments:
Post a Comment