Monday, June 3, 2024

நெல்லை உக்காரை

 நெல்லை உக்காரை

திருநெல்வேலி  தீபாவளி ஸ்பெஷல்

உக்காரை 

திருநெல்வேலி, தூத்துக்குடி, அம்பா சமுத்திரம், கல்லீடைகுறிச்சி போன்ற ஊர்களில் உக்காரை இல்லாத தீபாவளியே இல்லை...

எப்படி செய்வது என்று பார்க்கலாம்

கடலைப்பருப்பு  1 cup
பொடித்த  வெல்லம்  1 cup
நல்லெண்ணெய்  4Tablespoon
நெய் வாசனைக்கு  2 spoon
ஏலக்காய், முந்திரி 
பல்பல்லாக கீத்துன தேங்காய்  கொஞ்சம்

முதலில் வாணலியில் கடலைப்பருப்பை நன்றாக சிவப்பாக.வாசனைவரும்வரை வறுக்கணும் இது ரொம்ப முக்கியம்)

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து வறுத்த கடலைப் பருப்பு மூழ்கும் வரை விட்டு இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

கடலைப்பருப்பு நன்றாக ஊறியதும் தண்ணிஇல்லாமல் நன்றாக வடிகட்டி ஒரு தட்டில் பரத்தி வைக்கவும்...

நன்றாக உலர்ந்த கடலைப்பருப்பை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்தாலே நன்றாக உதிர்ந்து விடும். சற்று நறநற என இருக்கணும்

ஒரு வாணலியில் வெல்லத்தைப் போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணி விட்டு  வெல்லம் கரைந்து நன்றாக கொதிவரணும். லேசாக பிசுபிசுப்பு வந்தால் போதும்.

அதில் உதிர்த்த கடலைப்பருப்பைப்போட்டு அடுப்பை ஸிம்மில் வைத்து கொஞ்சமாக நல்லெண்ணெய் விட்டுவிட்டு கிளற வேண்டும். 

கிளறக்கிளறஉதிர ஆரம்பிக்கும். நன்றாக உதிரும் வரை கிளறணும். சுமார் அரைமணி யாவது ஆகும்.

அப்புறமாக ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, தேங்காய்ப் பல் ஆகியவற்றைஉதிர்த்த உக்காரையில் சேர்க்கணும்....

இதற்கு நல்லெண்ணெய் தான் ப்ரதானம்....

புட்டுபோல இருக்கும். ஆனால் புட்டல்ல.. உக்காரை...

செய்து பாருங்கள்... வறுத்துப்போட்ட தேங்காயும், முந்திரியும் சாப்பிடும் போது தேவாமிர்தமாக இருக்கும்......👍👍👍

No comments:

Post a Comment