🌹💫இடுப்பு வலியும்! Centre of Gravity யும்!
இடுப்பு வலிக்கும்(Disc prolapse) Centre of Gravity க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா??💫🌹
நண்பரின் பதிவிலிருந்து....
என்னுடைய அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
2014-ஆம் ஆண்டு சென்னையில் தங்கியிருந்த பொழுது தாங்கவே முடியாத இடுப்பு வலி வந்தது தாம்பரத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன்.
அவர்கள் உங்களுக்கு வந்திருப்பது Disc Prolapse என்னும் வியாதி. முதுகெலும்பில் உள்ள இரண்டு எலும்புகளுக்கு நடுவில் உள்ள சவ்வு பிதுங்கி வெளியே வந்துவிட்டது. இதை சரிசெய்ய வேண்டுமென்றால் ஒரு ஆபரேஷன் செய்து வெட்டி எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.
உண்மையில் வலி தாங்கவே முடியவில்லை. ஏதேதோ செய்தும் வலி சரியாகவில்லை. வலி என்றால் உயிர்போகும் வலி. அது போன்ற வலியை அனுபவித்ததே கிடையாது. பெல்ட் சிகிச்சை எல்லாம் கொடுத்தார்கள். அப்பொழுதும் சரியாகவில்லை. வலி பொறுக்க முடியாமல் ஆபரேஷன் கூட செய்து விடலாம் என்று நினைத்தேன்.
அப்பொழுது வேலை செய்து கொண்டிருந்த கம்பெனியிலிருந்து UK சென்றே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. வலியுடன் UK பயணம்.
அங்கு Leamington Spa என்னும் ஊரில் வேலை. என்னுடைய கெட்ட நேரம் (இது நல்ல நேரம் என்று தான் சொல்ல வேண்டும்) நான் தங்கியிருந்த இடத்திலிருந்து கம்பெனிக்கும் செல்லும் வழி போக்குவரத்து தடை செய்யப்பட்டு விட்டது சில காரணங்களுக்காக. தினமும் 3.5 கிலோ மீட்டர் நடந்தே தான் செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
உண்மையில் வாழ்க்கையிலேயே அவ்வளவு கஷ்டப்பட்டு நடந்தது கிடையாது. முதல்நாள் நடந்து சென்று கம்பெனிக்கு சென்று விட்டு வந்து படுத்து உறங்கி அடுத்த நாள் எழுந்திருக்கும் பொழுது வலி சிறிது சரியானது போல் தோன்றியது. அடுத்த நாளும் நடந்து சென்றேன் வலி மேலும் குறைந்தது. இவ்வாறாக ஒரு நான்கு நாட்களில் வலி முற்றிலும் சரியானது.
மிகவும் ஆச்சரியமாக இருந்தது. வலி சரியானது மகிழ்ச்சியாக இருந்தாலும் அது எப்படி சரியானது என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.
இந்தியாவில் இருந்ததற்கும் இங்கிலாந்தில் இருந்ததற்கும் ஒரே ஒரு வித்தியாசம் நான் கம்பெனிக்கு நடந்து சென்றது மட்டுமே.
இணையத்தில் தேடிய பொழுது ஒருவர் தன்னுடைய blog இதில் Centre of Gravity கும் இடுப்பு வலிக்கும் உள்ள தொடர்பை பற்றி பகிர்ந்திருந்தார்.
Centre of Gravity என்பது ஒரு பொருளின் எடை முழுவதும் ஒரு புள்ளியில் குவிந்து இருக்கும். அந்தப் பொருளின் எடையானது அந்தப் CG புள்ளியின் வழியே பூமியை நோக்கி விழும். அந்த எடை என்னும் விசையானது பொருளின் அடித்தளத்தில் விழுந்தால் அந்த பொருள் எந்த பாதிப்பும் இன்றி நிற்கமுடியும். அடித்தளத்தை தாண்டி விழுந்தால் அந்த பொருள் கீழே விழுந்துவிடும்.
இதே போன்று ஒரு விதியை கொண்டுதான் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் இன்னும் சாயாமல் இருந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் அதன் எடையானது பைசா நகர கோபுரத்தின் அடித்தளத்தில் விழுகிறது.
எப்பொழுது அதன் எடையானது அதன் அடித்தளத்தை தாண்டி விழுகிறதோ அந்த கோபுரம் கீழே விழுந்துவிடும்
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை கூட அப்படித்தான் வேலை செய்கிறது
பஸ்ஸில் நடத்துனரை பார்த்தால் கால்களை அகட்டி வைத்து இருப்பார். ஏனென்றால் எந்த ஒரு நிலையிலும் அவருடைய எடையானது அவரின் பாதத்திற்கு உள்ளே விழுந்து விடும். அதனால் அவர் கீழே விழுவதில்லை.
அதேபோல் நம்முடைய உடம்பில் Centre of Gravity மாறினால் அது நம் உடம்பை ஒரு பக்கமாகப் பிடித்து எடுக்க ஆரம்பித்துவிடும் அதனால் ஜவ்வு பிதுங்கி வெளியே வருகிறது இதேபோல்
Centre of gravity புள்ளி மாறுவதற்கு சில காரணங்கள்
1. உடல் எடை அதிகரிப்பது
2. காலை நேராக வைத்து நடக்காமல் சாய்ந்து நடப்பது
3. சரியான நிலையில் அமராமல் இருப்பது
4. பேண்ட்டின் பின்புறம் மிகப்பெரிய பர்ஸ் வைப்பது
இதை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்றால் உங்களுடைய செருப்பு அல்லது ஷூ ஒரு பக்கமாக தேய்ந்து இருக்குமானால் உங்களுக்கு இந்த பிரச்சினை வரலாம் என்று அர்த்தம்.
எனக்கு அந்த பிரச்சினை வந்த சமயங்களில் நான் மிகப்பெரிய பர்ஸ் வைத்திருந்தேன் மற்றும் எனக்கு புதிதாக வந்த சாய்வு நாற்காலியில் நேராக அமர முடியாமல் ஒரு சைடாக அமர வேண்டிய நிலை இருந்தது.
அதன்பிறகு பாண்டில் பர்ஸ் வைக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன். மற்றும் நாற்காலியை மாற்றி விட்டு நேராக அமர ஆரம்பித்தேன். எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் 2 to 3 கிலோ மீட்டர் வாக்கிங் சென்றுவிட்டு வந்தால் எனக்கு அந்த வலி சரியாக ஆரம்பித்தது.
அதன்பிறகு ஒரு இரண்டு மாதங்களுக்கு வலி அடிக்கடி வந்தது. அதன் பிறகு கடந்த ஏழு வருடங்களாக ஒரு சிறு வலியும் கூட வருவதில்லை.
நடக்கும் பொழுது கால்களை நேராக வைத்து மார்ச் பாஸ்ட் செய்வது போல் நடக்க வேண்டும் அப்பொழுதுதான் Centre of Gravity கால்களுக்கு நடுவில் சரியாக விழும். கால்களை அகட்டி வைத்து நடந்தாலும் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.
ஒருவேளை சென்னை மருத்துவர்கள் கூறியதுபோல் ஆபரேஷன் செய்திருந்தால் என் முதுகுத்தண்டு நிலைமை இப்பொழுது என்ன??
இடுப்பு வலி வருவதற்கு இந்த அறிவியல் கான்சப்ட் உண்மை என்றால் இது போன்ற சிம்பிளான தீர்வுகளை ஏன் மருத்துவர்கள் கூறக்கூடாது???
இப்பொழுதெல்லாம் நான் பாடம் நடத்தும் பொழுது Centre of Gravity பற்றிய வகுப்பில் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். எதிர்கால மருத்துவர்கள் அவர்கள் தானே!
இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தை மருத்துவ நண்பர்கள் கூறலாம்.!
No comments:
Post a Comment