”மாமா, தீபாவளி அன்று அமாவாஸ்யை தர்ப்பணமும் சேர்ந்து வந்துள்ளது. பித்ரு தர்ப்பணம் செய்பவர்கள் தர்ப்பணத்தன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இல்லையே. சற்று குழப்பமாக உள்ளது. தெளிவுப்படுத்த வேண்டுகிறேன்”
நீங்கள் சொல்லுவது சரிதான். பொதுவாக தர்ப்பணம் செய்யும் நாளன்று எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது.
ஆனால், தீபாவளி அன்று நாம் அனுஷ்டிப்பதற்கு பெயர் கங்கா ஸ்நானம் என்பதாகும். அவசியம் எல்லோரும் இதை அனுஷ்டிக்க வேண்டும்.
மஹா பெரியவா அவர்கள் இந்த கங்கா ஸ்நானத்தை பற்றி சொல்லியிருப்பதை சற்று இங்கு பார்ப்போம்:
’பிள்ளை போன நாளைப் பண்டிகையாக எல்லோரும் எந்தக் காலத்திலும் நின்று போகாமல் செய்து வரவேண்டும்’ என்று பூமாதேவி ஆசைப்பட்டாள். பண்டிகை என்பதால் மங்கள ஸ்நானம், புது வஸ்திர தாரணம், பக்ஷண போஜனம் எல்லாவற்றையும் ஏற்படுத்திக் கொடுத்தாள். இதிலே பிள்ளை நினைவு வரும்படி புதிசாக, நூதனமாக ஏதாவது இருக்க வேண்டுமென்று உதயத்துக்கு முந்தியே தைல ஸ்நானம் செய்ய வேண்டும் என்று வரம் வாங்கினாள். பகவானே இதற்கு ஒப்புக் கொண்டும் கூட, இப்படி சாஸ்திர விரோதமாக அப்யங்கனம் பண்ண யாராவது பயப்படப் போகிறார்களே என்று நினைத்து, பயம் போகும்படியாக என்ன செய்யலாம் என்று பார்த்தாள். ‘அன்றைக்கு அந்த வேளையில் தேய்த்துக் கொள்கிற எண்ணையில் லக்ஷ்மியும், குளிக்கிற வெந்நீரில் கங்கையும் வஸிக்கும்படி செய்துவிட்டால் யாரும் பயப்பட மாட்டார்கள்; லக்ஷ்மியும் கங்கையும் வேண்டாம் என்று எவருமே நினைக்க மாட்டார்கள். இதனால் ஸகல ஜனங்களுக்கும், பண்டிகை என்ற ஸந்தோஷத்துடன் புண்ணியம் என்பதும் கிடைக்கும்’ என்று நினைத்தாள். இதனால்தான் அந்த ஸ்நானத்துக்கு கங்கா ஸ்நானம் என்றே பேர் ஏற்பட்டது.”
சரி, விஷயத்துக்கு வருவோம்.
சாதாரணமாக மற்ற நாட்களில் நாம் எண்ணெய் தேய்த்துக் குளிப்போமே அந்த குளியல் மாதிரி கிடையாது இது. கங்கா ஸ்நானம் என்பது சாஸ்த்ரத்தில் எடுத்துள்ள ஒரு அனுஷ்டனமாகும். ஆதலால் அனைவரும் அதி காலையில் விதிப்படி கங்கா ஸ்நானம் செய்யலாம்.புத்தாடையும் உடுத்திகொள்ளலாம். தோஷமில்லை.
பிறகு சுமார் காலை 9 மணிக்கு பிறகு மீண்டும் குளிர்ந்த நீரில் அல்லது வெந்நீரில் ஒரு ஸ்நானம் செய்து மடியாக வஸ்த்ரம் தரித்து தர்ப்பணம் செய்பவர்கள் தர்ப்பணத்தை அனுஷ்டிக்கலாம்.
சர்மா சாஸ்திரிகள்
No comments:
Post a Comment