Thursday, October 28, 2021

குரு சுக்கிர மூடம்

 குரு சுக்கிர மூடம்  என்றால் என்ன ?

குரு சுக்ர மூடம்:

குருவும் , சுக்கிரனும் ஒரே வீட்டில் அல்லது ராசியில் இணைந்து , சூரியனுடன் கூடி இருந்தால் மூடம் என்று அழைப்பார்கள்.  குருவோ அல்லது சுக்கிரனோ சூரியன் நின்ற பாதத்திலிருந்து 3 பாதங்களில் நின்றால்  அதனை மூடம் அல்லது அஸ்தங்கம் என்று அழைப்பார்கள்.

குருவும், சுக்கிரனும் சூரியனிடத்தில் அஸ்தமனமாகி , பலம் குன்றி இருப்பதை குரு சுக்ர மூடம் என்பதாகும். இவர்கள் அஸ்தமனமான காலங்களில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது

சுக்கிரன்  அஸ்தங்கம் அல்லது மூடம் 

சூரியனுக்கு 8 டிகிரிக்குள் சுக்கிரன் அமையப் பெற்றால் சுக்கிரன் அஸ்தங்கம் அடைவார். இக்காலத்தில் பிறந்தவர்களுக்கு பால்வினை நோய், இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை ஏற்படும். கோட்சாரத்தில் சுக்கிரன் அஸ்தங்கம் பெற்ற காலத்தில் திருமண சுபகாரியங்களை செய்யக்கூடாது. 

குரு  அஸ்தங்கம் அல்லது மூடம் 

சூரியனுக்கு 11 டிகிரிக்குள் குரு இணைந்தால் அஸ்தங்கம் உண்டாகிறது. இக்காலத்தில் பிறந்தவர்களுக்கு புத்திர தோஷம், பணப் பிரச்சினை, வாழ்வில் முன்னேற்றமற்ற நிலை உண்டாகும்

பொதுவாக ராகு - கேது மற்றும் சந்திரனைத் தவிர மற்ற கிரகங்கள் சூரியனுடன் நெருங்கி வரும்போதெல்லாம், அந்த கிரகம் அஸ்தங்க பெற்று, அதன் வலிமையை இழக்கிறது. ஆனால், அக்கிரகம் எவ்வளவு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்பது மிக முக்கியமானது.

குரு அல்லது சுக்கிரன் சூரியனுடன் நெருங்கி 3 பாதங்களில் அமைந்தால் அதனை பஞ்சாங்கத்தில் குரு மூடம் , 

அல்லது சுக்கிர மூடம் என்று போட்டுஇருப்பார்கள்.  இந்த கால கட்டங்களில் திருமணம் , நிச்சயதார்த்தம் , சுப நிகழ்ச்சிகள் , கிரஹ பிரெவேஷம் , சீமந்தம் , முதலிரவு , சீமந்தம்  போன்றவற்றை தவிர்க்க வேண்டும் 

உங்கள் ஜாதகத்தை பார்த்து  முழுமையான  பலன்கள் அறிய ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

No comments:

Post a Comment