Wednesday, October 27, 2021

பட்டர் பீன்ஸ்/சோயா பீன்ஸ்/ மொச்சை பயறு ..பொரியல்

          ஓரே கல்லில்    மூன்று மாங்காய்

செய்முறை 

கீழே உள்ள மூன்று பயறு வகைகளும் சமைப்பது எப்படி என்ற செய்முறை ஒன்றே..

அவை : 1.பட்டர்பீன்ஸ்( வெள்ளையா இருக்கும்)

2 சோயா பீன்ஸ் ( இது pink கலர்..ரெட் பீன்ஸ் என்றும் கூறுவர்

3 .அப்புறம்..நம்ப  பச்ச மொச்சைபயறு

சாம்பாருக்கு பருப்பு  குக்கரில் வேகப் போடும் போது இதில் ஏதேனும் ஒன்றை ஒரு டப்பாவில் போட்டு சேர்த்து வேக வைங்க.

6 ,அ -7 நிமிடம் கழித்து  வேக வைத்த  பீன்ஸ் அல்லது மற்றதை திறந்து நீரை வடி கட்டி எடுத்து வைங்க.

மசால் அரைக்க: தேங்காய்    துருவல்,சீரகம்,வத்தல்..கசகசா..அரைத்து எடுங்க

கொஞ்சம் சின்ன வெங்காயத்தை வெட்டி வைங்க..வானலியில் எண்ணெய் ஊற்றி 

கடுகு ,உ.பருப்பு தாளித்து ..வெங்காயத்தை போட்டு வதக்கி..அரைத்த மசாலா ஊற்றுங்க.

உப்பு ,ம.தூள்..போட்டு வேண்டிய நீர் ஊற்றுங்க.

கொதித்த பின்..பட்டர் பீன்ஸ்/ சோயாபீன்ஸ்/ மொச்சை பயறு(  ..வேக வைத்தது) ஏதேனும் ஒன்றை அதில் சேருங்க..பட்டர் பீன்ஸ்/ சோயா பீன்ஸ் என்றால் கொஞ்சம் கரம் மசாலா தூள் போடுங்க..

நல்லா கொதித்து நீர் வற்றிய பின்..

இறக்க ..சுவையான பட்டர் பீன்ஸ்/சோயா பீன்ஸ்/ மொச்சை பயறு ..பொரியல் ரெடி.




No comments:

Post a Comment