Monday, October 25, 2021

வீக்நெஸ்

 வீக்நெஸ்(சிறுகதை)

அவரோட அக்காவுக்கும் அவ புருசனுக்கும் சண்டை. அவர் கவர்மெண்ட் ஆபீசுல தாம்பரத்துல வேலபாத்துக்கிட்டு இருந்தார். அக்கா டீச்சர். அவர் வாங்குற சம்பளத்த அப்படியே சம்சாரத்துக்கிட்ட குடுத்துட்டு செலவுக்குக் கேட்டுவாங்குற டைப். ஆனா அதிகாரம் தூள் பறக்கும்  ஆபீஸ்ல ரெஸ்ட் இல்லாத வேலை ரொம்பட்டயர்டுன்னு

ஆனா கொஞ்சநாளா சம்பளம் கொறைஞ்சது. காரணம்கேட்டதுக்கு ஒருத்தருக்கு அவசரத் தேவைக்கி கடன் குடுத்து ருக்கிறதா சொன்னார். நம்பவும் முடியல. வேற வழியு மில்ல. ஆனா அது தொடர்ந்துச்சு. அக்கா எப்புடிக்கேட்டாலும் ஏதவது உப்பு சப்பில்லாத காரணம் சொன்னார். நம்ப முடியல. சம்பளம் சொளையா மாசம் 5000 கொறஞ்சது....

அவர் சொல்ற காரணம் ஏத்துக்கமுடியல அதுதான் அக்கவுக்கும் அவருக்கும் சண்ட என்ன பண்ணுற பணத்தைன்னு கேட்டா சொல்லமாட்டேன்றார்...

அவர் கொஞ்ச பருத்த ஒடம்பு. நல்லாத்தீணி தின்பார். சாப்பாடு சாப்பாடு சாப்பாடுதான் வேற எந்தக்கெட்டபழக்கமும் இல்ல.  சண்டமுத்தி இவர்கிட்ட வந்துச்சு. இவர் விசாரணையில எறங்குனார்.

அவரத்தனியாக்கூட்டிட்டுப்போய்  விசாரி ச் சார். என்ன ந்னு சொல்லுங்கமாப்ளே எதுவானாலும் நான்  பாத்துக் கிறேன் னு கேட்டார். அப்பயும் அவர்  நிறையா ஸ்வீட்  வாங்கித்தின்றேன்ன்னு சொன்னார். அதுக்கு இவர் ஏதாவது நம்புறமாதிரி சொல்லுங்க ஒருமனுசன் ஸ்வீட்டா மாசம் 5000 ரூவாக்கி வாங்கித்தின்றேன்றது நம்புறமாதிரி இல்ல அதுவும் போக உங்களுக்கு சுகர்வேற அப்புடிச் சாப்புட்டிருந்தா அது டெஸ்ட் பண்ணும்போது தெரிஞ்சிருக்கும். உண்மையச்சொல்லுங்க ஏதாவது வில்லங்கத்துல மாட்டிக் கிட்டீங் களான்னு கேட்டார், ஏதாவது பொண்ணுக விசயமா ந்னு கேட்டவன்ன அவர் முழிச்சார்..

அப்புறமா சொன்னார். ஆமா பொண்ணு விசயம்தான் ஆனா இது வேறமாதிரி.ன்னார்

வேறமாதிரின்னா ஏதாவது ஏடாகூட மாப் பண்ணி  மாட்டிக்கிட்டீங்களான்னு கேட்டப்ப அவர் தயங்கிட்தயங்கி சொன்னார். ஆமா ஒரு பொண்ணு எங்க ஆபீசுல என்ன மெரட்டி பணம் பறிக்கிறா அவளுக்குத்தான் மாசம் 5000 ரூ குடுக்குறேன்னு சொன்னார்

அதுக்கு இவர் கேட்டார். அவ ஏன் உங்களை   மெரட்டனும். நீங்க என்ன பண்ணுனீங்கஎதைச் சொல்லி பயமுறுத்தி காசுகேக்குறா நீங்க என்ன பண்ணுனீங்கன்னு கேட்டார். அதுக்கு அவர்சொன்னார் அது நான் சொல்லி விளங்கவைக்க முடியாது நீங்களே வந்து விசாரிங்க தெரியும்ன்னு சொன்னார்..

இது இவருக்குப்புதுவிதமா இருந்துச்சு, ஏதாவது தப்பா கிப்பா நடந்துமாட்டிக்கிட்டாரா அதை வெளியே சொல்லிருவேன்னு மிரட்டி அவ காசுபரிக்கிறாளான்னு சந்தேகம் வந்துச்சு. ஆனா இவர் அதுமாதிரி ஆள் கிடையாதே.. அதுக்கு இவர் சரிப்பட மாட்டா ரேன்னு தோணிச்சி. ஆனா என்னவோ பிரச்சனை இருக்கு சொல்லத்தயங்குறார்ன்னு தெரிஞ்சது..

சரி இவர் ஆபீஸ்லபோய்த்தான் பாக்கலா மேன்னு சொல்லி தாம்பரத்துல  இவர் கூடப்படிச்சவர் ஒருத்தர் போலீஸ்ல இருக்கார். அவர்கிட்டக்கேப்போமேன்னு போன் பண் ணார். அவர் சொன்னார் நீங்களும் வாங்க நானும் வாறேன் போய்ப்பாக்கலாம் எது வானாலும் சமாளிக்கலாமுன்னு சொன் னார்.

அதுமாதிரியே ரெண்டு பேரைக் கூப்புட்டுக் கிட்டு போலீஸ் நண்பரையும் வரச்சொல்லிட்டு இவரையும் கூப்புட்டுக்கிட்டுப்போனார்,

அங்கபோலீஸ் நண்பர் இவங்களுக்காகக் காத்திருந்தார், எல்லாரும் சேந்து அவர் வேலைபாக்குற ஆபீசுக்குப்போனாங்க. மொதல்ல அவரை மாத்திரம் உள்ளாற போகச்சொன்னாங்க. 

அவர் உள்ளாற போய் சீட்டுல ஒக்காந்தார். ஒரு பத்துநிமிசம் கழிச்சி போலீஸ் நண்பரை வெளியே நிக்கச்சொல்லிட்டு இவரும் கூடவந்தவங்களும்  உள்ளாற போனாங்க.

அவரோட அக்கா புருசன் பக்கத்துல ஒரு வயசுப்பொண்ணு ஒக்காந்து இருந்துச்சு. அவர் இவர்கிட்ட கண்ணக் காட்டினார், இவதான் அதுன்னு.. ஒடனே இவர் அந்தப் பொண்ணு கிட்ட கொஞ்சம் உங்ககூடப்பேசணும்ன்னு சொன்னார். அந்தப்பொண்ணு கேட்டுச்சு நீங்க யாரு ஏன் நான் உங்ககூடப்பேசணும்ன்னு..

அதுக்கு இவர் சொன்னார் நான் இவரோட சம்சாரத்தோட தம்பி இவருக்கும் உங்களுக்கும் ஒரு பிரச்சனைன்னு சொன்னார் அதுதான் பேசனும்னு சொன்னவன்ன அவ மொகம் வெளிறிப்போச்சு,அவ சொன்னா பேசலாம் ஆனா இப்ப இல்ல ஆபீஸ் லஞ்ச் டைல வெளிய வாறேன் அப்பப்பேசலாம்னு சொன்னா.. இவருக்கு  ஏதோ பெரிய வில்லங்கத்துல அவர் மாட்டிக்கிட்டதுமாதிரி தெரிஞ்சது,,,

வெளிய வந்து போலீஸ் நண்பர்கிட்ட நடந்ததைச்சொல்ல அவர்.சரி நான் போய்ட்டு ஒருமணிக்கி வாறேன் விசரிப்போம்ன்னு சொல்லிட்டுப்போயிட்டார்.

இப்ப அவரோட அக்கா புருசன் வெளியே வந்தார் . கேட்டீங்களா அவகிட்ட என்ன சொன்னான்னு கேட்டார். இவர் அவ சொன்னதைச்சொன்னார். அப்ப இவர் சொன்னார் விடாதீங்க நல்லா மெரட்டுங்க அப்பத்தான் பயப்பட்டு காசுகேக்க மாட்டார்ன்னு சொன்னார். இவங்களுக்குத் தலை சுத்துச்சு... சரி வாங்க டீ சாப்புட்டு வரலாம்னு சொன்னவன்ன அவரும் நானும்வாறேன் டீ சாப்புடன்னு கெளம்பிட்டார்

அப்ப இவர் கேட்டார் நீங்கபாட்டுக்குக்குக் கெளம்பிட்டீங்களே ஆபீஸ்ல ஒண்ணும் கேக்கமாட்டாங்களான்னு கேட்டார். அதுக்கு அவர்சொன்னார் கேட்டுருவாங்களா என்ன கேக்க முடியுமா என்ன. அதுக்கான ஏற்பாடு செஞ்சிட்டுத்தான வந்துருக்கேன்னு சொன்னார்.

வெளிய இவ்வளவு தைரியமாப்ப்பேசுறவர் ஏன் அந்தப்பொண்ணுகிட்ட பயந்து பணம் குடுக்குறார்ன்னு தெரியல. எப்புடிக்கேட்டாலும் உண்மைய சொல்லமாட்டீங்குறார்.

டீசாப்புட்டுப்போகவும் அவங்க லஞ்ச்டைம் வரவும் சரியா இருந்துச்சு. அந்தப்பொண்ணு வெளியே வந்துச்சு. அதுக்குள்ள போலீஸ் யூனிபாரத்துல நண்பர் வர அந்த பொண்ணு மொகம் வெளிறிப்போச்சு.. போலீஸ் நண்பர் அந்தபொண்ணுகிட்டபேசுனார். அப்ப வாங்க இங்க பேச வேணாம் கொஞ்சதூரத்துலகாபி சாப் இருக்கு அங்க போய் பேசலாம் பப்ளிக்ல பேசுனா பாக்குறவங்களுக்கு ஒருமாதிரியாத் தெரியும்..னு சொன்னா அவ

எல்லாருமா காப்பிசாப்புக்குப்போனாங்க. அங்க பொலீஸ் நண்பர் அந்தப் பொண்ணுக் கிட்டக்கேட்டார்  இந்தாம்மா நீ இவர்கிட்ட மாசாமாசம் மிரட்டி பணம்வாங்கிறதா இவர் கம்ளெயிண்ட் பண்ணுறார்... அது உண்மையா சொல்லு... நு கேட்டவன்ன அவ சொன்னா பணம் வாங்குறது உண்மைதான் ஆனா மிரட்டியான்னு அவரச் சொல்லச் சொல்லுங் 

 கன்னு சொன்னா. இவர் கிட்டகேட்டதுக்கு  மிரட்டனும்னு அவசியமில்ல நானாவே குடுத்துறுவேன்னு சொன்னார்

இவருக்குக்கோவம் வந்துருச்சு. உண்மையச் சொல்லித்தொலைங்க ஏன் நீங்க அவளுக்குப் பணம் குடுக்கனும் நு கோவமாக்கேட்டார்

அதுக்கு அந்தப்பொண்ணு சொல்லிச்சி அதுக்குப்பதில் நான் சொல்றேன்ன்னு. எல்லாரும் அவளைப்பாத்தாங்க அவ என்ன சொல்லப்போறான்னு...

அவ சொல்ல ஆரம்பிச்சா. சார் இவரு இருக்காறே படு சோம்பேறி. சீட்டுல ஒக்காந்தவன்ன தூங்க ஆரம்பிச்சிடுவாரு. குடுத்தவேலைய செய்யமாட்டாரு. அப்புடி த்தூங்கி த்தூங்கி ஃபைல் எல்லாம் கொஞ்சநாளைக்கிமுன்னாடி சேந்துபோச்சு.

இவருக்கு மேல உள்ளவர் சாதாரணமா அப்புறம் மெரட்டிகிரட்டி எல்லாம் சொல்லிப்பாத்தார். ஆனா இவரால முடியல. சீட்டுல ஒக்காந்ததும் தூங்கஆரம்பிச்சிடுவாரு.

என்ன பண்ணியும் இவரச்சரிபண்ண முடியல இவரால வேலை செய்யமுடியல. அதைப் பாத்துட்டு அவர் இவருக்குமெமோ குடுத்தார்.. அப்புறமும் இவர் அப்புடியேதான் இருந்தார். மேலதிகாரிக்கி என்ன பண்ணுறதுன்னு தெரியல. இவரைக்கூப்புட்டுப்பேசுனார் ஒரு வாரம் டைம் தாறேன்  பெண்டிங் வொர்க் எல்லாம் முடிக்கனும். இல்ல உன்ன வேலைய விட்டுத்தூக்கிடுவேன்னு மிரட்டுனார். அப்ப இவர் கண்ணு கலங்கிடுச்சு அதோட வெளிய வந்த இவரை நான் பாத்தேன் விவரம் சொன்னார். நான் இவர்கிட்ட சொன்னேன் நான் வேண்ணா உதவி செய்யிறேன் பெண்டிங் வேலைய முடிச்சிரலாம்ன்னு சொன்னேன் 

இவரும் அம்மா தயவு பண்ணுமான்னு கேட்டார். அதுக்கப்புறம் ராப்பகலா வேலைசெஞ்சி பெண்டிங்  வேலைகளை க்ளீயர் பண்ணிக்குடுத்தேன். இவர் வேலை தப்பிச்சது... அப்பக்கேட்டேன் இதுவரைக்கும் சமாளிச்சிட்டீங்க இனிமேஎன்ன பண்ணப் போறீங்கன்னு கேட்டேன். 

அதுக்கு அவர் சொன்னார் அதான் தெரியல என்ன பண்ணுறதுன்னு பரிதாபமாக்கேட்டார் அப்புறம் அவரே ஒரு ஐடியாக்குடுத்தார். நீங்களே பண்ணிக்குடுங்க தினம்  சும்மா பண்ணவேணாம் மாசம் 5000 ரூ குடுத்துடுறேன் முடிச்சிக்குடுத்துடுங்கன்னு சொன்னார்... 

அதுக்கப்புறம் இவர்  தினம் வந்து தூங்க இவர் வேலைய நான் செஞ்சி குடுக்க இவர் பணம் குடுக்க இவர் பொழப்பு ஓடுது . இது ஆபீஸ்ல எல்லாருக்கும் தெரியும். மேலதிகாரியும் எப்படியோ வேலை முடிஞ்சா சரின்னு விட்டுட்டாரு. ஒங்களுக்குச்சந்தேகம் இருந்தா ஆபீஸ்ல வந்து நீங்களே விசாரிங்கன்னு சொன்னா...

இவர் மூஞ்சி வெளக்கெண்ண குடிச்சமாதிரி இருந்துச்சு. ஏன்யா அத்தன தடவ கேட்டேன் உண்மைய ச் சொல்லித் தொலைச் சிருக்க வேண்டியதுதானன்னு கேட்டார். அதுக்கு இவரோட அக்கா புருசன் சொன்னார். அப்புறம் ஆபீஸ்ல கடுமையான வேலைன்னு நான் எப்புடிச்சொல்றது.. விசயம் தெரிஞ்சா உங்க அக்கா காரித்துப்புவா.. நீங்க இவ்வளவுதூரம் வரமாட்டீங்கன்னு நெனைச்சேன்னு சொன்னார்,

இவர் அந்தப்பொண்ணப்பாத்து அம்மா நீ தெய்வம் ஒன்னப்போய் தப்பா நெனைச் சிட்டோம் மன்னிச்சிரும்மான்னு சொன்னார்..அவ போனதும் அவர் சொன்னார் இதை உங்க அக்காகிட்ட சொல்லீடாதீங்கன்னு கெஞ்சுனார். சரி பாக்கலாம்னு சொன்னார் இவர்.

வீட்டுக்கு வந்ததும் அவர்சொன்னார் ஆபீஸ்ல ஒரே வேலை காபி எடுத்திட்டுவான்னு சம்சாரத்துக்கிட்ட சொன்னார்.. அவளும் காப்பிகொண்டாந்து வைச்சிட்டுக்கேட்டா போன விசயம் என்னாச்சுன்னு 

அதுக்கு இவர் அக்காபுருசனை பாத்தார். அவர் கண்களால் கெஞ்சினார். சொல்லீடாதன்னு இவர் சொன்னார் . அந்தப்பொண்ணு பாவம் கஸ்ட்டப்படுறவ. இவர் இரக்கப்பட்டு உதவி செஞ்சிருக்கார் உன்கிட்ட சொன்னா திட்டு வன்னு  உண்மையச்சொல்லலன்னு சொன்னார் அவரோட அக்கா சொன்னா உண்மையில உதவின்னா சரிதான் அதுல தப்பு ஒண்ணுமில்ல... என் கிட்ட சொல்லிருக்கலாமுல்லன்னு .

இப்ப அவரோட அக்கா புருசன் ரகசியமா இவரைக்கும்புட்டார்... நன்றின்னு சொல்றமாதிரி....

No comments:

Post a Comment