Thursday, October 28, 2021

வேத நாராயணப் பெருமாள் கோவில் தொட்டியம்

 🌞வேத நாராயணப் பெருமாள்   கோவில் தொட்டியம்


🌞குழந்தைகள் கல்வியில் மேம்பட்டு நல்ல மதிப்பெண் எடுக்க

🌞உயர் கல்வி படித்து பட்டம் பெற, மற்றும் முனைவர் பட்டம் பெற

🌞ஜோதிடத்துறையில் மெய் ஞானம் பெற்று பிராகாசிக்க

🌞சர்பதோஷம் அறவே விலக

ஒரு முறை செல்ல வேண்டிய முக்கியமான திருத்தலம் வேதநாராயணப் பெருமாள் கோவில் தொட்டியம்

🌞மூலவர் : வேத நாராயணப் பெருமாள்.
🌞உற்சவர் : வேத நாராயணன்
🌞தாயார் : வேத நாயகி தாயார், 
                       வேதவல்லி 
🌞தல விருட்சம் : வில்வம்
🌞தீர்த்தம் : காவிரி
🌞ஆகமம் : பாஞ்சராத்திரம்
🌞புராணப்பெயர் : வேதபுரி
🌞ஊர் : திருநாராயணபுரம்
🌞மாவட்டம் : திருச்சி
🌞மாநிலம் : தமிழ் நாடு

🌞வேதநாராயணபெருமாள் திருக்கோவில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது.

🌞இருப்பிடம் : திருச்சியில் இருந்து 52 கிமீ தூரத்தில் தொட்டியம்.அங்கு இருந்து 5 கிமீ தூரத்தில் திருநாராயணபுரம்.

🌞அமைதியாக உள்ள திருத்தலம். ஜருகண்டி சொல்ல ஆளில்லை.போ! போ! எத்தனை நேரம் நகரு! என்று விரட்ட ஆளில்லை.பெருமாளை பொறுமையாக ,ஆனந்தமாக, நிறைவாக, சேவித்துவிட்டு வெளியே வரலாம்.

🌞ஸ்ரீவேதநாராயண பெருமாளும், ஸ்ரீவேதநாயகித் தாயாரும் உலகையே ரட்சித்து, மக்கள் அனைவருக்கும் ஞானம் வழங்கி  அருளும் அற்புதத் திருத்தலம் திருநாராயணபுரம்.

🌞நான்கு வேதங்களையும் தலையணையாகக் கொண்டு, ஆதிசேஷன்மீது புஜங்க சயனத்தில் பள்ளி கொண்டபடி, நாபிக்கமலத்தில் இருக்கும்  பிரம்மதேவருக்கு வேத உபதேசம் செய்கிறார் திருமால் என்கிறது தலபுராணம்.

🌞பெருமாளின் திருவடியில் ஸ்ரீதேவியும் ஸ்ரீபூதேவியும்  இருக்கிறார்கள்.  கீழே பிரகலாதன் மூன்று வயதுக் குழந்தை வடிவில் அழகாக காட்சித் தருகிறார்.

🌞பிரமதேவன், பிரகலாதன்,  சுக்கிரீவன், கருடன், அனுமன், ஆரையர், சோழர் முதலியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம்.

🌞இத்தலம்  முதல் ரங்கம் என்று போற்றப்படுகிறது.

🌞சத்திய ஆஞ்சநேயர் : 

🌞கோவில் முகப்பில் இருக்கும் கம்பத்தடி தீபஸ்தம்பத்தில் கம்பத்தடி ஆஞ்சநேயர் உள்ளார்.

🌞இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்குள் வழக்கு பிரச்சினை ஏற்பட்டால், இவர் முன்பாக பேசி தீர்த்து கொள்கிறார்கள்.

🌞பொய் சொன்னாலோ, ஏமாற்றினாலோ, இவர் முன்பு சத்தியம் செய்து தரும் படி கேட்கும் வழக்கம் உள்ளது.

🌞நட்சத்திர தீபம் :

🌞பிரம்மா உபதேசம் பெற்ற தலம் என்பதால் இத்தலம் கல்விக்குரியதாக கருதப்படுகிறது. 

🌞வேதநாராயணப் பெருமாளுக்கு திருவோணம்,ஏகாதசி,அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

🌞ஜாதகத்தில் குரு நீசமானாலும் or  குரு சாயா கிரகங்கள் ராகு/கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும் or குரு சர்பகிரகங்களின் நட்சத்திர காலில் நின்றாலும் குரு தோஷம் ஏற்படுகிறது.

🌞ஜாதகத்தில் குருபலம் இன்றி இருந்தால் திருமணம் தள்ளி போகும். புத்திர பாக்ய தடையை ஏற்படுத்தும். கல்வி தடை படும்.

🌞குரு தோஷத்தால் திருமணதடை உள்ளவர்கள் வேத நாராயணருக்கு துளசி மாலை அணிவித்து சன்னதியில் 27  நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். 

🌞இந்த வழிபாட்டை வியாழக்கிழமை அல்லது பிறந்த நக்ஷத்திரம் அன்று செய்வது சிறப்பு.

🌞ஐந்து நெய் விளக்கேற்றி, வெண்தாமரை மலரால் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதன் மூலமாக, கல்வி மேம்படும், தொழில்  விருத்தியாகும், வியாபாரம் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.இதை நக்ஷத்திர தீபம் என்கின்றனர்.

🌞ஆதிசேஷனும் அவரது மனைவியும் வேத நாராயணர் பாதங்களை தாங்கி கொண்டு இருக்கின்றனர்.

🌞மேலே ஆதிசேஷன் கீழே அவருடைய மனைவி என பத்து தலைகளுடன் ஆதிசேஷனை தரிசிக்கலாம்.வேறு எங்கும் இப்படி காணமுடியாது.

🌞ராகு-கேது - சர்பதோஷத்தால் பாதிக்கப்படவர்கள்  ஆதிசேஷனுடன் காட்சியளிக்கும் வேத நாராயணப்பெருமாளை வந்து தரிசித்தாலே சர்பதோஷம்

🌞காவி உடை ராமானுஜர் ; 

🌞ராமானுஜர் இங்கு வந்த பொழுது பெருமாள் காவிரியில் நீராடி காவியுடை அணிந்து வா! என்றார்.ராமானுஜரும் நீராடி காவியுடை அணிந்து வந்தார்.

🌞சித்திரை திருவாதிரை நக்ஷத்திரம் அன்று வருடம் தோரும் ராமானுஜர் காவியுடை அணிந்து எழுந்ததருளும் நிகழ்வு இக்கோயிலில் நடைபெறும்.

மற்ற நாட்களில் இவருக்கு வெண்ணிற ஆடை அணிவிக்கப்படும்.

🌞ஆண்டாள்,ராமானுஜர், நம்மாழ்வார்,திருமங்கை ஆழ்வார்,பிள்ளை லோகாசாரியார்,மணவாள மாமுனிகள் ஆகியோர் பிராகாராத்தில் உள்ளனர்.

🌞 அரையருக்கு அருள்:

🌞திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் : 73

🌞உடம்பை வேறுத்தேனோ நறையூராரைப் போலே...!

🌞பிள்ளைத்திருநறையூர் அரையர் என்ற பக்தர், தன் மனைவி மற்றும் ஆறு குழந்தைகளுடன் பெருமாளை தரிசிக்க வந்தார்.அப்போது பெருமாள் சன்னிதிக்கு மேலே பனை ஓலை வேயப்பட்டிருந்தது

  🌞அப்போது, ஓலையில் தீப்பற்றும்படி மாயச்செயல் ஒன்றை நிகழ்த்தினார் பெருமாள்.

🌞அதிர்ந்து போன பக்தர், பெருமாள் மீது தீப்பிழம்பு விழாமல் இருக்க மனைவி, குழந்தைகளை பெருமாள் மீது படுக்க வைத்து அவர்கள் மீது தானும் குறுக்காக விழுந்து, எம்பெருமான் மீது தீப்பிழம்புகள் விழாதபடி தடுத்தார்.

🌞விபத்தின்றி வாகனம் ஓட்ட நினைக்கும் டிரைவர்கள்,

தீயணைப்பு துறை உள்ளிட்ட ஆபத்தான துறையில் பணி செய்பவர்கள் திருச்சி அருகிலுள்ள திருநாராயணபுரம் வேத நாராயணப் பெருமாள் கோயிலிலுள்ள பிள்ளைத்திருநறையூர் அரையரை சென்று தரிசித்து பயன் பெறுகின்றனர்.

🌞தல வரலாறு I : 

🌞பிரம்ம தேவன் சற்றே கர்வம் அடைய அவர்  கர்வத்தை உணர்த்தி இங்கே ஸ்ரீ வேதநாராயணராக இருந்து, ஸ்ரீ பிரம்மாவுக்கு வேத ஞானம்  செய்தருளினார் பெருமாள்.  

🌞கர்வம் அழிந்த பிரம்மா, தனக்கு வேதங்களை மீண்டும் உபதேசிக்கும்படி பெருமாளை வேண்டினார். அவர் கேட்டபடி செய்த பெருமாள், இத்தலத்தில் பள்ளி கொண்ட நிலையில் சிலையானார்.

🌞இத்தலத்தில் ஸ்ரீ வேதநாராயண பெருமாள், குரு ஸ்தானத்தில் இருந்தும் புதனுக்கு அதிபதியாக இருந்தும்  அருள்பாலிகிறார், இத்தலத்தில் வந்து வேண்டிக்கொண்டால், கல்வியும் ஞானம் கைகூடும் என்பது பக்தர்களின் திடமான நம்பிக்கை.  

🌞தல வரலாறு 2 

🌞பிரகலாதனைக் காப்பதற்காகவும் இரணியனை வதம் செய்வதற்காகவும் ஸ்ரீநரசிம்ம அவதாரம் எடுத்தார் திருமால்.  

 🌞பிறகு  பிரகலாதன், 'பெருமாளே! தங்களை சாந்த ரூபமாகத் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும்’ என வேண்டிட, திருமால் “திருநாராயணபுரத்துக்கு வா” என்று பிரகலாதனை அழைத்தார். 

🌞அதன்படி பிரகலாதன் மூன்று வயதுக் குழந்தை வடிவில் அழகாக இங்கே காட்சித் தருகிறார்.

🌞இங்கே சாந்த ஸ்வரூப மூர்த்தியாக இருந்து, தன்னை  நாடி வரும் அன்பர்களுக்கெல்லாம் அருள் புரிகிறார் ஸ்ரீவேதநாராயண பெருமாள், என்கிறது ஸ்தல புராணம். 

🌞தல வரலாறு 3 

🌞காலப்போக்கில் வழிபாடு இல்லாமல் பெருமாள் திருமேனி மண்ணுக்குள் புதைந்தது. ஒரு முறை இங்கு வந்து தங்கினார் மன்னர் வானவராயர். 

🌞அவர் கனவில் தோன்றிய பெருமாள் தான் மண்ணில் புதைந்துள்ள இடம் பற்றி உணர்தி தன்னை மேலே எழுந்தருளச் செய்து  கோயில் கட்ட உத்தரவிட்டார்,

🌞மன்னரும் அவ்வாறே செய்தார். வேதத்தை உபதேசித்ததால், பெருமாளுக்கு 'வேதநாராயணர்' என பெயர் வந்தது

🌞தல வரலாறு 4

🌞மகாபலிச் சக்கரவர்த்தி மைசூரை நோக்கி  ராஜ்யத்தை விரிவாக்கம் செல்லும் வழியில் மண்மேடாக இருந்த இடத்தில் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தார். அப்போது மன்னன் கனவில் தோன்றிய பெருமாள், 'இங்கே பூமிக்கு அடியில் இருக்கும்  என்னை மேலே எழுந்தருளச் செய்து, கோயில் எழுப்பு “உனக்கு ஜயம் உண்டாகும்” என அருளினார்.  

 🌞மன்னர், விடிந்ததும்  பெருமாளின் திருவிக்ரகத்தைப் பூமியில் இருந்து எடுத்து, பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைத்து வழிபட்டுச் சென்றார்.   

🌞வேதநாராயணபெருமாள் திருக்கோவிலுக்காக அங்கே ஒரு கிராமத்தை உருவாக்கி, அதற்குத் திருநாராயணபுரம் என்று பெயர் சூட்டி, கிராமத்தையும் நிலங்களையும் தானமாக அளித்துவிட்டுச் சென்ற பிறகு மைசூரை வென்றார் என்கிறது ஸ்தல வரலாறு.

🌞குறிப்பு : தல வரலாறு 3 &  4  சற்று வித்யாசப்படுகிறது.

🌞திருவிழா:

 🌞புகழ் பெற்ற வைஷ்ணவ தலமான ஸ்ரீவேதநாராயண பெருமாள் தலத்தில் வைகாசி மாதம் தேரோட்டம் நடைபெறும்.

 🌞வேதநாராயணபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுவது  வழக்கம்.  ஏகாதசி திருவிழாவில் பகல்பத்து நிகழ்ச்சி பத்து நாட்களாக நடைபெறும்.

🌞வேதநாராயணப்பெருமாளுக்கு திருவோணம், ஏகாதசி மற்றும் அமாவாசை நாட்களில் விசேஷ பூஜை நடக்கிறது.

🌞பொது தகவல்:

பங்குனி உத்திரத்தன்று பெருமாள் வேதவல்லித்தாயார் சன்னதிக்கு எழுந்தருளி  பின்னர் பெருமாளும் தாயாரும் நம்மை ஆட்கொண்டு சேர்த்தி சேவை தருகின்றனர்.

🌞ஸ்ரீஆண்டாள் நாச்சியார் தனிச்சந்நிதியில்  அருள்பாலிக்கிறாள்.

🌞ராமானுஜர், நம்மாழ்வார்,திருமங்கை ஆழ்வார்,பிள்ளை லோகாசாரியார்,மணவாள மாமுனிகள் ஆகியோர் பிராகாராத்தில் உள்ளனர்

🌞 கோயில் திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

திறந்திருக்கும்.

🌞முகவரி:

நிர்வாக அதிகாரி, 
அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில்,
திருநாராயணபுரம் - 621 203. திருச்சி மாவட்டம்.

போன்:

+91-99766 11898.  போன் நம்பர்

+(மாறுதலுக்கு உட்பட்டது) 

🍒 சுபமஸ்து 🙏 தீர்காயுஷ்யமஸ்து. 

💥 ஶ்ரீமன் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே.
💥 ஶ்ரீமதே நாராயணயாய நம:   
✳️ ஶ்ரீமதே ராமானுஜாய நம

பாரா மூன்றில் ஒரு சிறிய திருத்தம். பெருமாள் மணலில் புதையுண்டு போகவில்லை. கள் வர்கள் பெருமாள் திருவாபரணங்களை  தளவாட வந்தபோது பனை ஓலையில் வேய்யப்பட்டு அதில் இருந்துள்ளார். அதை தீ வைத்ததால்  பெருமாள் மீது. தீப்பொறி படாமல் தனது குழந்தைகளை பெருமாள். மீது தீப்பொறி படாமல் மேலே கிடத்தி யும். அதற்கு மேல். மனைவி&தானும் போர்வை போல். பெருமாள் மறைத்து  தீப்பொறி. படாது காப்பாற்றினார். அதன் பிறகு தான்
கட்டடம் கோவில் கட்டப்பட்டது.

No comments:

Post a Comment