Monday, October 25, 2021

நேர்மை

 நேர்மை

-வேதவன்-

பெண் போலீஸில் உயரம் என்றால் அது தபஸ்வி தான் 5அடி8 அங்குலம். அழகான தோற்றம், பார்ப்பதற்கு வட இந்திய பெண் தான் உறுதியாக சொல்லலாம்.போலீஸ் தேர்வு ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடை பெற்ற பல சோதனைகளிலும் மிக சிறந்த முறையில் விளங்கியதால் அவள்  தேர்ச்சி பெற்றாள். தபஸ்வி நீதித்துறையில் பட்டம் பெற்றதினால், போலீஸில் நீதி துறையில் அதிருஷ்டவசமாக வேலை கிடைத்ததினால் மூன்று மாதமாக வேலை செய்கிறாள். மிக நல்லபெயரை எடுத்தது மட்டுமில் லாமல், கணினி இயக்குவதில் நல்ல தேர்ச்சி பெற்றவராக இருப்பது கூடுதல் படிப்பின் வெற்றி.  விவாக ரத்து துறையில் ஒரு மாதமாக வேலை செய்கிறாள்.  

அவள் தாய் மிக நல்லவள் படிப்பறிவு இல்லை .இரண்டு வருடங்களாக தந்தையின் குடி பழக்கத்தினால் கொடுமை படுத்தப் பட்டாள். அவள் தந்தை ஒரு அரசியல் கட்சியில் மாவட்டசெயலாளர் கமலக்கண்ணன் என்றால் கட்சியில் பலருக்கும் தெரியும். கமலகண்ணனுக்கு 50 ஏக்கர் நிலம் அவருடைய பரம்பரை சொத்தாக இருக்கிறது, அதனால் அவருக்கு அரிசி, பருப்பு மண்டியும் உள்ளது. கமலகண்ணனுக்கு குழந்தையில்லை , ஒரு சாலை விபத்தில் அந்த காரிலிருப்பவர்களை கமலக்கண்ணன் முன்நின்று எல்லோரையும் மருத்துவ மனையில் சேர்த்தார், தபஸ்வி என்ற 2வயது குழந்தை விபத்தில் கொஞ்சம் கூட அடிபடவில்லை ஆனால் தூங்கிக்கொண்டிருந்தது. அதில் பயணித்த தாய் தந்தை காரை ஓட்டிவந்த டிரைவரும் சிகிச்சை பலனின்று இறந்து விட்டார்கள். குழந்தை தபஸ்வியை கமலகண்ணனும் அவள் மனைவியும் எடுத்து வளர்த்து வந்தார்கள். இந்தவிவரங்கள் எதுவும் தபஸ்விக்கு தெரியாது. கமலக்கண்ணனும் அவர் மனைவி மஞ்சுளாவும் தபஸ்யாவிடம் சொல்லவில்லை. தபஸ்வியை மிக நல்ல முறையில் வளர்த்தார்கள் 

கமலகண்ணனும் தபஸ்வியை ரிஷி வெலி பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதால் மிக கஷ்டப்பட்டு அந்த பள்ளியிலேயே சேர்த்து விட்டார். அந்த பள்ளிகூடம் ஆந்திராவிலுள்ள மதனபள்ளி என்ற இடத்தில் உள்ளது. அதில் சேறுவதற்கு ஒரு அதிரிஷ்டம் வேண்டும். தபஸ்விக்கு அந்த பள்ளியில் இடம் கிடைத்தது அவளின் பூர்வஜன்ம புண்யம் என்று நினைத்தார் கமலக்கண்ணன். 

தபஸ்வி பள்ளிகூடத்தில் விடுதியிலேயே தங்கி படிக்கும் நிலையில், தபஸ்வி நல்ல ஒழுக்கமும், பணிவுடன் கூடிய மரியாதை, தைரியம் இவைகளுடன் நல்ல வாழ்க்கை முறைகளும் கற்றுணர்ந்தாள். தபஸ்வியும் தன் பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு வழக்கறிஞ்ஞர் படிப்பையும் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றாள். தாய்,தந்தையிடம் மிக்க அன்பும் மரியாதையும் வைத்திருந்தாள்

   தபஸ்வியின் தாய் கேன்ஸர் என்ற கொடுமையான நோயினால் மருத்துவ மனையில் இறக்கும் தருவாயில் தபஸ்வியிடம் “டாக்டர் சுதாகர் உன் அப்பாவின் தூரத்து உறவு அரசு மருத்துவமனையில் பிரபலமான டாக்டராக இருப்பதாலும் அவர்களின் மாமா மந்திரியாக இருப்பதால்  நீ இவரையே  திருமணம் செய்து கொள்ளும்படி உணர்ச்சிபூர்வமாக சொன்னவுடன், தன் தாயின் கேன்ன்ஸர் சிகிச்சையின்போதே ஒருமாதத்தில் திருமணம் எளியமுறையில்  நடந்தது. அன்றைய தினமே தாய் இறந்துவிட்டாள்.  இந்த சோகத்தில் தனக்கு நடந்த திருமணம் முறிந்துவிட்டது என்று சுதாகரிடம் சொல்லிவிட்டு எந்த சுப காரியமும் கிடையாது என்றாள் தபஸ்வி. தாய் இறந்த சோகத்தில் தந்தையின் குடி பழக்கத்தினாலும் அவருடைய வீடு மற்றும் அவருக்கு சொந்தமான நிலங்களும் டாக்டர் சுதாகரின் பெயரில் எழுதி பத்திரபபதிவு செய்தது தபஸ்விக்குத் தெரியாது. கமலக்கண்ணன் இறக்கும் தறுவாயில் தபஸ்வியிடம்”தன் வீடு நிலங்களை சுதாகர் பெயரில் எழுதி வைத்துள்ளேன்”என்று கூறினார்.தந்தையும் அதே குடி பழக்கத்தின் தீமையினால் 10 நாளில் இறந்துவிட்டார்.

தபஸ்விக்கு  தன் கணவர் டாக்டர் மீது பற்றுதலே இல்லை. அவளும் திருமணத்தில்  சந்தோஷமில்லாமல் சோகமாகவே இருந்தாள். ஆனால் அவள் தன் தந்தை இறந்தது டாக்டர் சுதாகர் தான் காரணம் என்று தெரிந்து கொண்டாள். இரண்டு மாதம் கடந்தது தபஸ்வி சுதாகருடன் பேசுவதில்லை, அவள் தன் போலீஸ் வேலையில் எந்த நேரத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள். 

சுதாகர் ஒல்லியான உருவம் உயரம் 5அடி5 அங்குலம் தான் இருப்பார்.

வயது 29 எல்லாவித கெட்ட பழக்கத்தையும் கொண்டவர். எல்லா தவறுகளுக்கும் அவர் போலீஸில் மாட்டாதபடி சாட்சிகளே இல்லாதபடி தவறுகள் செய்வதில் மிக கெட்டிக்காரர்.அவருடைய மாமா அரசாங்கத்தில் விவசாய மந்திரியாக இருப்பது அவருக்கு கூடுதல் பலம்

இந்த நிலையில் சுதாகர் குடி போதையில் ஒரு நாள் திடிரென்று தபஸ்வியை  போலீஸ் வேலையை ராஜனாமா செய்ய சொன்னார். இந்த குடி பழக்கம் சுதாகருக்கு இருந்ததை பார்த்தவுடன் தபஸ்வி சுதாகருடன் சண்டை போட்டு சுதாகரை வீட்டை விட்டு வெளியேபோகச்சொன்னாள். 

சுதாகர் “நீ தான் இந்த வீட்டை விட்டு வெளியே போகவேண்டியவள். நானும் உன் தந்தையும் சேர்ந்து தான் எப்போதும் குடிப்போம் உன்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதினால் நான் அதிகம் குடிக்காமல் உன் அப்பனுக்கு அதிகமாக வாங்கிக்கொடுத்து இந்த வீட்டையும், 50 ஏக்கர் நிலங்களையும் என் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொண்டது,  உன்னை கல்யாணம் பண்ணுவதற்கு முன்பே செய்தாகிவிட்டது, நீ தான் இப்போது வீட்டை விட்டு வெளியே போகவேண்டும்” . என் அப்பா, வீட்டு கட்டுமான நிறுவகம் நடத்தி வருகிறார், நீதான் பார்த்தாயே ஒரு மாதத்திற்கு ஒரு முறை தான் வீட்டிற்கு வருவார் நானும் என் மாமா தான் எங்கள் பெரிய வீட்டில் இருக்கிறோம் . அநேக வேலைக்காரர்கள் எங்களுக்காக வேலை செய்கிறார்கள் 

நான் எவ்வளவோ கூப்பிட்டாலும் நீதான் என்னுடன் வரமுடியாது என்கிறாய்” என்றான். 

தபஸ்வி” நீ அயோக்யன் என்று எனக்கு முன்பே தெரியும் அதனால்தான் நான் உன்னுடன் பதிவு திருமணம் செய்து கொண்டேன். நீ இந்த வீட்டில் ஒரு உரிமையும் எடுக்கமுடியாது. நீ எவ்வளவு பெண்களை அரசாங்க திருமண பதிவில்லாமல் செய்து கொண்டதும் எனக்குத் தெரியும் . அதனால்தான் நீ எந்த சந்தர்ப்பத்திலும் என்கிட்டையே நெருங்காதபடி வைத்துக் கொண்டேன். (அவள் பயப்படவில்லை.) நிச்சயமாக உன்னை சட்டபடி தண்டனை அனுபவிக்கும்படி செய்வேன். என் போலீஸ் கண் உன் செயலை கண்காணிக்கும். நான் செய்வதை சொல்வதில்லை . பயந்தவள் நானில்லை . நான்எங்கே திருமணத்திற்கு பிறகு 3 மாத மாகியும்  உன்னிடம் வராமல் 24 மணி நேரமும் போலீஸ் கடமையிலிருப்பதற்காக ஏற்கனவே வேறு இடத்தில் தனியாக வசித்துக் கொண்டிருக்கிறேன். அது உனக்கு தெரியாது. நீ குடித்து என் தந்தையை யும் கெடுத்தாய் நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் நீயும் என் தந்தையும் கேட்கவில்லை” என்று ஒரு சிறு பதட்டமு மில்லாமல் சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டாள். 

போலீஸின் உயர் அதிகாரி சைபர் கிரைம் கேஸில் தபஸ்வி , குற்றவாளி யார் என்பதை விளக்கி சொல்லும் விதத்தை பாராட்டி அந்த கேஸில் சரியான ஆதாரத்தை கணினியில் காண்பித்தது சந்தேகமில்லாமல் குற்றவாளியை கைது செய்தார்கள். அதனால் தபஸ்வியின் திறமையை பாராட்டியதுடன் அவளை ஐ.பி.ஸ். தேர்விற்கு விண்ணப்பிக்குமாறு ஊக்கு வித்தார்  அவர் சொன்ன அன்றே ஐ.பி.ஸ். தேர்விற்கு விண்ணப் பித்தாள்  தபஸ்வி. 

தபஸ்வி கணினியிலும் (computer)கைபேசியிலும் (mobile)நிபுணர் என்பது தெரிந்தது. தன் கணவர் சுதாகரின் கணினியையும் கைபேசியையும் ஹேக் (hack)செய்து வைத்திருக்கிறாள். (ஹேக் என்றால் மற்றவருடைய கை பேசியோ அல்லது கணினியோ அவர்களுக்கு தெரியாமல் அவர்களிடம் வரும் தகவலையோ அல்லதுஅவர்களிடமிருந்து செல்லும் தகவலையும் அவர்கள் இருக்கும் இடத்தையும் மற்றவர் கண்காணிக்க முடியும்) சுதாகரை 24 மணி நேரமும் தன் கைபேசி மூலம் தபஸ்வி கண்காணித்து கொண்டிருக்கிறாள். சுதாகருக்கு இதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது.  

“விவாகரத்து தேவை, நான் தனியாக இருக்கமுடியும்”எனக்கு 24 வயது பூர்த்தியாவதற்கு 2 மாதம் தான் இருக்கிறது”..என்று தபஸ்வி  குடும்ப நீதிமன்றத்தில் வழக்காடினாள். அவள் கணவன் சுதாகர் ஒருஅரசு மருத்துவ டாக்டர்.

நீதிபதி பொன்னுசாமி “ தபஸ்வி உங்களுக்கு வக்கீல் தேவை யில்லையா?”  என்றார். அவள் உடனே பதில் சொல்லாமல் தன் மொபைலில் ஏதோ பார்த்துக்கொண்டே “எனக்குத்தேவையில்லை நானே ஒரு வக்கீல் யுவர் ஆனர்” நான் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் பிரிவில் இருக்கிறேன்.” என்றாள் பதட்டமில்லாமல் .   டாக்டர் சுதாகரின் வக்கீல் ரமேஷைப்பார்த்தார் நீதியரசர் பொன்னுசாமி. ரமேஷ் “உங்கள் விளக்கம் தேவை” என்றார்.

ரமேஷ்” ஐயாவிற்கு வணக்கம். என் கட்சிகாரர் திரு சுதாகர்  ஒரு அரசு  டாக்டர் அவருக்கு இன்று அதிகமான வேலை இருப்பதால் அவர் அறுவை சிகிச்சையில் அரசு மருத்துவ மனையில் இருக்கிறார்” அதனால்…என்றார். இடைமறித்த தபஸ்வி தன் மொபைலில் தன் கணவர் இருக்கும் இடத்தை லைவாக நீதிபதியிடம் காண்பித்தார். நீதிபதி அதைப்பார்த்து அசந்துவிட்டர். ரமேஷை தபஸ்வியின் மொபைலில் லைவாக டாக்டர் சுதாகர் இருக்கும் இடத்தையும், குடிபோதையில் தன்னையே மறந்த நிலையில் இருப்பதைப்பார்த்து, அவர் வக்கீல் என்ன சொல்லுவது என்பது தெரியாமல், “இந்த இடம் பாண்டிச்சேரி இது டாக்டர் சுதாகர் இல்லை அவரை போன்று வேறு ஒரு நபர் என்று என்னால் நிரூபிக்க முடியும்”. என்றார். 

தபஸ்வி பிரேம் குமார் என்ற மஃப்டியில் இருக்கும்  போலீஸ் காவலரை அழைத்து அங்கு பாண்டிசேரியில் டாக்டர் சுதாகரை எழுப்பி முகத்தை காண்பிக்க சொன்னாள். அந்த போலீஸ் காவலரோ ஒரு படி மேலே சென்று டாக்டர் சுதாகரை ஒரு இன்டர்வ்யூ வே நடத்தினார்.

டாக்டர் சுதாகர் “நான் ம்.பி.பி.ஸ் படித்தேன் ஆனால்  தேர்ச்சி பெறவில்லை ஒரு டாக்டரை போல் செயல் பட முடியும், எனக்கு அரசியல் செல்வாக்கு அதிகம்” என்று உளறியோதோடல்லாமல்  தான் தபஸ்வியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டேன் அவளுக்கு  போலீஸ் என்ற திமிரு அதிகம். என் செல்வாக்கை பயன்படுத்தி போலீஸ் வேலையையே இல்லாதபடி செய்ய என்னால் முடியும் அத்துடன் அவளை எனக்கு அடிமையை போல் வைத்திருப்பேன்” என்று சொன்னார்.

சுதாகரின் வக்கீல் ரமேஷ் நீதியாரசரை பார்த்து”இதில் ஏதோ சதி நடந்திருக்கிறது. தபஸ்வி மேடம் தன் போலீஸ் செல்வாக்கை பயன்படுத்தி சுதாகரை கடத்தி இருக்கிறார்கள்.” என்றார். 

தபஸ்வி “ அவர் பேசியதை லைவாக உங்களிடம் நான் காண்பித்ததைமோபைலில் பதிவு செயதிருக்கிறேன்” என்றாள். 

நீதிபதி மிக கோபத்துடன் ‘”ரமேஷ் நீங்கள் சொல்வது நிச்சயமாக இருக்கமுடியாது. தபஸ்வி மேடம் சரியான சமயத்தில் அவர் குடித்துக்கொண்டே இருக்கிறார் என்பதை நிருபித்துவிட்டார்கள். இன்னும் நீங்கள் கூறுவது நம்பும்படியாகயில்லை. இதில் தபஸ்வி மேடம் போலீஸ் செல்வாக்கினால் சுதாகருக்கு பின்னால் நிழலாக போலீஸ் இருக்கிறார்கள் என்பது மட்டும் நம்பலாம். 

நீதிபதி பொன்னுசாமி” தபஸ்வி மேடம்  நீங்கள் உங்கள் கணவர் குடிப்பதை உங்கள் போலீஸ் செல்வாக்கை பயன்படுத்தி திருத்தமுடியாதா? நீங்கள் கொடுத்த  தகவலின் படி உங்களுக்கு திருமணமாகி இன்னும் ஒரு வருடம் முடியவில்லை. நீங்கள் இருவரும் சேர்ந்து  வாழ்வதற்கு ஏதாவது சாத்ய கூறுகள் இருக்குமா? என்று நீங்களே ஆராய்ந்து பார்த்தால் நல்லது” என்பதை ஒரு அறிவுரையாக கூரினார்.

தபஸ்வி” இல்லை யுவர் ஆனர், அவர் என் தந்தையை போதைக்கு அடிமை யாக்கியதோடு பல வகையில் துரோகம் இழைத்திருகிறார். அவர் பல பெண்களுக்கு  வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் பரித்திருக்கிறார். இரு பெண்களை யாரும் அறியாதவாறு திருமணம் செய்து கொண்டு மும்பையில் விபசார தொழிலில் ஈடுபட வைத்திருக்கிறார். அதற்கு என்னிடம் ஆதாரம் கிடைத்திருக்கிறது. இவர்களை போன்ற ஆண்கள் உயிருடன் எரிக்கப் படவேண்டியவர்கள்” நான் அவரை சட்டதின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வாங்கித்தருவேன்”  இது போன்று அயோக்யதனம் புரிபவர்களுக்கு வாதாட ஒரு வக்கீல் வருகிறார் என்றால் அந்த தரம் தாழ்ந்து இருக்கும் வக்கீல்களுக்கும் தகுந்த பாடம் கற்பிக்கப்படும்”  என்றாள். வக்கீல் ரமேஷ் எதுவும் பேசாமல் இருப்பதுடன் முகத்தில் ஒரு அச்சம் ஏற்பட்டது நன்றாக தெரிந்தது. நிதிபதி “இந்த வழக்கின் தீர்ப்பை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்கிறேன்” என்றார். 

சுதாகரின் வக்கீல் ரமேஷ் சுதாகரின் மாமா விவசாய அமைச்சர் சந்திரசேகரை பார்த்து சுதாகரின் விவாக ரத்து விவகாரத்தை விளக்கி சொல்லிவிட்டு சுதாகரின் மோசமான செயலைப்பற்றியும் , தபஸ்வி தன்னை மிரட்டியதையும் சொன்னார். 

அமைசர் ரமேஷிடம் “கவலைபடவேண்டாம்  நான்  பார்த்து கொள்கிறேன்” என்று மிக பணிவுடன் பேசி அனுப்பி வைத்தார்.

அமைச்சர் சந்திரசேகர் சுதாகரை மொபைலில் கூப்பிட்டார். 

எங்கு இருக்கிறாய்? நீ உடனே இங்கு வா” என்றார். 

சுதாகர் இதோ வந்து கொண்டே இருக்கிறேன் மாமா என்ன விஷயம் மாமா” என்று கேள்வி கேட்டார். 

சந்திர சேகர்”ஃபோனில் பேச வேண்டாம் சீக்கிரமாக வா” என்று சொல்லி ஃபோனை ஆஃப் பண்ணிவிட்டார்.

(சுதாகர் வீட்டிற்கு  வந்தவுடன்) “ இன்று இரவு மிக முக்கியமான வேலையாக நீ கல்கத்தா போகவேண்டும் உனக்கு விமான டிக்கெட் தயாராக இருக்கிறது. நீ முன்பு தங்கியிருந்த கோமளவிலாசில் 

தங்குவதற்கும் ஏற்பாடு செய்துவிட்டேன். விமானம் இன்று இரவு 12.10 க்கு புறப்பட்டு கல்கத்தாவிற்கு காலை 2.35 மணிஅளவில் சேரும் . அங்கு நம்முடைய மணி விமான நிலையதிற்கு வருவார். அங்கிருந்து உன்னை கோமளவிலாஸில் விட்டுவிடுவார். நாளை காலை 5 மணி அளவில் பூச்சிகொல்லும் தயாரிப்பாளர் நமக்கு ஒரு கோடி தருவதாக வாக்களித் துள்ளார். உன் ரூமில் வந்து அதை கொடுப்பார்  , அந்த சூட் கேஸை திறந்து 500 நோட் கட்டுக்ளாக இருக்கிறதா என்று நீ பார்க்க வேண்டும். பிறகு இந்த டிஜிடல் ஏடை (தராசை) எடுத்து செல். அந்த தொகை ஒரு சூட் கேஸ் முழுவதும் இருக்கும் 24. 2 கிலோ இருக்கவேண்டும், நீ அந்த பெட்டியின் எடையை பரிசோதிக்கவேண்டும். எனக்கு எந்த காரணமாக இருந்தாலும் ஃபோன் செய்ய க் கூடாது. 

கோமள்விலாஸில் நம் மணிக்கு நல்ல செல்வாக்கு. அவர் அரசாங்கத்தில் பல சலுகை அந்த ஹோட்டலுக்கு செய்திருக்கிறார்.அவர் வயது 40 அம்மணி டிராவல்ஸ் என்ற நிருவனத்தை நடத்தி வருகிறார். அவர் ஒரு புகழ் பெற்ற பாக்ஸ்ர். எந்த கட்சி காரரும் நம் மணியிடம் மரியாதையாக இருப்பார்கள். அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. குடி பழக்கம் இல்லாதவர். பல ஏழைகளுக்கு உதவி செய்கிறார். என்னிடம் மிகுந்த மரியாதையாக இருக்கிறார். அதனால் நம் பணம் பாதுகாப்பாக வரும்.

மணி புது இன்னொவா கார் வாங்கி இருக்கிறார். அதில் தான் நீங்கள் இருவரும் கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வரவேண்டும். அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் மணி  செய்துவைப்பார். நீயும் மணியும் காரை ஓட்டிக் கொண்டு வரவேண்டும். இரண்டு நாட்கள் ஆனாலும் பத்திரமாக வரவேண்டியது “ என்றார். ஏர்போர்ட் செல்வதற்கு ஊபெரை உபயோகிக்க வேண்டும்” என்றார்.

திட்டமிட்டபடி விமானம் கல்கத்தா நிலயத்திற்கு சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தது. சுதாகர் மணிக்கு மேசேஜ் அனுப்பினார்.மணியும் சுதாகரை கொண்டு போய் கோமளவிலாசுக்கு விட்டுவிட்டு சென்றார்.

திட்டமிட்டபடி காலை 5 மணிக்கு பணம் சுதாகர் கைக்குமாறியது. பெட்டியில் 500 ரூபாய் நோட்டுக்கள் அடுக்கி இருந்தது, எடை பார்த்தால் சரியாக 24. 2 கிலோ இருந்தது. சுதாகருக்கு ரொம்ப சந்தோஷம்.  சுதாகர் மணி வருவதற்கு முன்பே ஒரு கட்டு 500 ரூபாயை எடுத்துக்கொண்டார். ரூம் சர்வீஸ் பையனைக்கூப்பிட்டு 2 பாட்டில் 1000ml ராயல் செலஞ்ச் விஸ்கி வாங்கிவரும்படி  சொல்லிவிட்டு அதிகமான பணத்தை கொடுத்து அனுப்பினார்.  மிதி பணத்தை அந்த பையனிடமே கொடுத்துவிட்டார்.

சுதாகர் மகிழ்ச்சியை கொண்டாட ஒரு பாட்டிலில் பாதி அளவு  விஸ்கியை காலி செய்து விட்டார். சுதாகர் மணிக்கு தன் மொபைல் வழியாக பெட்டி பணம் வந்து விட்டதை மெசேஜ் செய்துவிட்டார். 

மணி சரியான நேரத்திற்கு புதிய இன்னோவா காருடன் ஒரு காலியான பெரிய சூட் கேஸுடன் இறங்கினார். அவரை பார்த்த ஹோட்டல் மேனேஜர் மிக மரியாதையுடன் “நீங்கள் நேற்று சொன்னது போல் அந்த சுதாகர் சார் ரூமுக்கு இன்று காலை சரியாக 5 மணிக்கு  வந்தார்கள் ஒருவர்,  கார் வெளியே இருக்கிறது என்று சொல்லிவிட்டு  உங்கள் பெயரை சொன்னார். நான் உடனே நீங்கள் சொன்னது போல் ஹோட்டல் மேயின் மின்சார ஸ்விசை அணைத்து விட்டேன். அவர்கள் ஒரு  சூட்கேசை தள்ளிக்கொண்டு சுதாகர் ரூம் அருகில் சென்றதும் மையின் ஸ்விச்சை ஆன் பண்ணிவிட்டேன்”. ஒரு நிமிடம் தான் கரன்ட் அணைக்கப்பட்டது. நம் ஹோட்டல் சி.சி.டி.வி யில் அவர்கள் வந்து போனது பதிவாகவில்லை” என்று சொல்லி விட்டு மேனேஜர் சுதாகர் ரூம் மாற்று சாவியை மணியிடம் கொடுத்தார்.

மணி”நல்ல வேலை செய்தீர்கள், இதற்கு நான் உங்களுக்கு ஒரு வெகுமதி கொடுப்பேன்” என்றார்.

மணி சுதாகரின்  ரூம் கதவை திறந்து உள்ளே நுழைந்து ரூம் கதவை தாளிட்டுக்கொண்டார். மணி என்பவர் ஒரு பாக்ஸர் அவரின் இரும்பு கரத்தினால் சுதாகரின் தலையில் மெதுவாக தொட்டு  எழுப்பினார். 

சுதாகர் மெதுவாக எழுந்தார் , மணியைப்பார்த்தவுடன் விஸ்கி பாட்டில்களை தான் கொண்டு வந்த பேக்கில் போட்டுக்கொண்டார், பிறகு  முகத்தை குளியலறைக்கு சென்று கழுவிக்கொண்டார்.

 சூட்கேஸ் சரியாக மூடாமல் ஒரு எடை மிஷினின் மேல் இருப்பதை பார்த்தார் மணி, 500 ரூபாய் கட்டு ஒன்று எட்டி பார்த்தது போல் தெரிந்தது. மணி அதை அன்புடன் எடுத்துக்கொண்டு தன் பட்டையான தடி  பெல்டிலுள்ள சிப்பை திறந்து போட்டுக்கோண்டார். பிறகு சுதாகரை கூப்பிட்டு “அந்த பெட்டியில் இருக்கும் பணத்தின் எடை சரியாக இருக்கிறதா? ஏன் பெட்டியை சரியாக மூடவில்லை?” என்று கேட்டார்.

சுதாகர் “500 பண்டுல்கள் சரியாக இருக்கிறது. நான் எடை பார்த்ததில் சரியாக இருக்கிறது. எண்ணியும் பார்த்தேன் சரியான தொகை இருக்கிறது. அடுத்தது நம் திட்டம் என்ன எப்போது இங்கிருந்து கிளம்பப் போகிறோம்?” என்றார்.

மணி ”அந்த பெட்டியில் இருக்கும் 500 ரூபாய் பண்டல்களை எடுத்து நான் கொண்டுவந்த இந்த சூட்கேஸில் மாற்றவேண்டும். பிறகு நாம் ஹோட்டல் மேனேஜரை கூப்பிட்டு ஒரு 500 ரூபாய் பண்டல் கொடுத்து விட்டு இந்த காலி சூட்கேசை அவரிடம் கொடுக்கவேண்டியது. இன்று இரவு 1 மணிக்கு 

காரில் சென்னை புறப்பட வேண்டியது. கட்டக் என்ற இடத்தில் பிரமோத் ரிசார்ட் க்ளப் ஒரு 3 ஸ்டார் ஹோட்டல், நாம் நாளை பகல் 11 மணிக்கு அங்கு சென்றுவிடுவோம் அங்கு  ஓய்வெடுத்து கொள்வோம் இது தான் இப்போதிய திட்டம் .” என்றார். 

திட்டத்தின் படி மேனேஜர் சிவாவை கூப்பிட்டு 500 ரூபாய் பண்டல் ஒன்று கொடுத்து அந்த காலி சூட்கேஸையும் கொடுத்துவிட்டார்கள்.

மேனேஜர் சிவாவிற்கு மிக சந்தோஷம் “என் மகளின் படிப்பிறகு இந்த தொகை உதவியாக இருக்கும்” என்று நன்றி சொன்னார்.

மணி”சிவா  லஞ்ச் எங்க இருவருக்கும் கொண்டுவர முடியுமா?”என்றார். 

மேனேஜர் சிவா “ உடனே அனுப்பிறேன் சார்”. என்றார்.

மேனேஜர் போனவுடன் கதவை தாளிட்டார் மணி .பிறகு சுதாகரை பார்த்து“சுதாகர் உங்கள் குடி பழக்கத்தை 2 நாட்களுக்கு விட்டு விட வேண்டும். குடித்துவிட்டு உங்களால் வண்டி ஓட்ட முடியாது. நமக்கு கொடுக்கப்பட்ட வேலை பணத்தை பத்திரமாக உன் மாமவிடம் சேர்க்கவேண்டும்” என்றார். சுதாகர் “ நான் சென்னை செல்லும் வரை இனிமேல் குடிக்கமாட்டேன்.” என்றார். 

சுதாகர் தங்கி இருக்கும் ரூம்முக்கு இரண்டு ரூம் தள்ளி இரண்டு நபர்கள் புதியதாக வந்து தங்கினார்கள். மணி மேனேஜரிடம் சென்று, புதியதாக வந்திருப்பவர்களை பற்றி விஜாரித்தார். 

“அந்த இருவரும் டில்லியில் ஹோட்டல் நடத்துபவர்கள், வயது 28 என்று ரெகர்டில் இருப்பதாக சொன்னார்”. இருவரும் நல்ல உயரமாகவும் நல்ல உடற்கட்டுடன் இருபது, ஒரு வேளை போலீஸ்  ஆஃபிஸராக இருப்பர்களோ? என்பது மணிக்கு சந்தேகம். மணி எதுவும் பேசாமல் சுதாகருக்கு வாட்ஸ் அப்பில் மேசேஜ் அனுப்பினார். நாம் ஹோட்டல் ரூமை இன்னும் அரை மணிக்குள் காலி செய்து பிரின்ஸ் குலாம் மொஹமத்  ரோடில் ஒரு 2 ஸ்டார் ஹோட்டல் வேங்கடேஸ்வரா இருக்கிறது அதில் சென்று விடவேண்டும்” 

இந்த மெசேஜ் தபஸ்வி மொபைலிலும் பார்க்கலாம் என்பது பாவம் மணிக்கு தெரியாது.

மணி வேகமாக சுதாகர் ரூமுக்கு வந்தார், சுதாகர் “நான் ரெடி” உங்கள் மெசேஜை பார்த்தேன்” என்றார். இருவரும் ஹோட்டலை காலி செய்து மணி தன் காரை கொண்டுவந்து சுதாகர் சூட்கேசையும் ஒரு ஏர் பேக்கையும் எடுத்துக் கொண்டு காரில் வைத்து விட்டார். மணி ராஷ் பிஹாரி அவின்யு வழியாக ராஜாசீதராம் சாலை வழியாக ப்ரின்ஸ் குலாம் மொஹமத் சாலையில் வேங்கடேஸ்வரா ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார்கள். மணிக்கு எல்லாஹோட்டலிலும் நல்ல மரியதை இருப்பதினால் ஹோட்டல் மேனேஜர் “உங்களுக்கு ரூம் ரெடி சார் என்று மேனேஜரே ரூம் வரை விட்டுவிட்டு நீங்கள் இரவு 1மணிக்கு செல்லலாம் என்றார்.

மணியும் சுதாகரும் நிம்மதி அடைந்தார்கள். 

தபஸ்வி தன் மேல் அதிகாரிகளிடம் சுதாகர் கல்கத்தாவில் எங்கு இருக்கிறார். என்பதை விளக்கியதுடன். “சென்னையிலிருந்து அனேகமாக விவசாய மந்திரி யான சுதாகரின்  மாமா எதோ ஒரு பெரிய தொகையை அவருக்கு கொடுப்பதாக வாக்களித்திருக்கிறார். அந்த தொகை நிச்சயமாக லஞ்சமாகத்தான் இருக்க வேண்டும் என்ற என்னுடைய ஊகத்தின் அடிப்படையில் நீங்கள் இரண்டு கல்கத்தா சி.ஐ.டி. போலீஸை கோமளவிலாஸ் ஹோட்டலுக்கு அனுப்பயது, என் சந்தேகத்தை வலு சேர்க்கும் வகையில் சுதாகரும் இன்னும் ஒரு கூட்டாளியான மணி என்பவரும் கோமளவிலாஸ் ஹோட்டல் ரூமை காலி செய்துவிட்டு தற்போது அருகிலுள்ள வேங்கடேஸ்வரா ஹோட்டலுக்கு சென்றுவிட்டார்கள். இனிமேல் அவர்களை சி.ஐ.டி. போலீஸ் பின் தொடர வேண்டாம். அந்த சி.ஐ.டி. போலீ ஸ் அனுப்பிய ஃபோட்டோவில் சுதாகரும், இன்னும் ஒரு நபரும் பெரிய சூட்கேஸையும் தள்ளிக்கொண்டு

இன்னவா காரில் ஏற்றுவதை காண்பித்திருக்கிறார்கள்.(அந்த இன்னவா கார் நம்பரும் தெரியும்படியாக ஃபோட்டோவில் இருக்கிறது. )இது நிச்சயமாக ஒரு பெரிய தொகை சூட்கேஸில் இருக்கும் என்ற என் சந்தேகத்திற்கு வலு சேர்க்கிறது” என்றாள்

“அனேகமாக அவர்கள் அந்த இன்னவா காரிலேயே சென்னைக்கு வருவார்கள் என்று நினைக்கிறேன்.  நான் சுதாகரின் லொகேஷனை அவருடைய மொபைல் மூலமாக என்னால் கண்டுபிடிக்க முடியும். நிச்சயமாக இரண்டு நாளில் அவர்கள் லொகேஷனை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் சந்தேகத்தின் பேரில் இருவரையும் கைது செய்தால் உண்மையை நிச்சயமாக கண்டுபிடிக்கமுடியும்” என்றாள்.

போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் அவள் தன் நம்பிக்கையுடன் ஒரு லஞ்சத்தை எப்படி திட்டமிட்டு வாங்குகிறார்கள் என்பதை விளக்கமாக சரியான படி நிரூபிப்பது தபஸ்வியின் அறிவு திறமை பாராட்டுவதுடன், தபஸ்வியின் நேர்மைக்கு ஐ.பி.ஸ். க்கு கூடிய விரைவில் தேர்ந்தெடுக்கப் படுவார் என்ற கருத்து அதிகாரிகளால் சொல்லப்பட்டது. 

இரண்டு நாட்கள் பிறகு அந்த இன்னவா கார் ரெட் ஹில்ஸ் நெருங்கும் சமயத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலிஸ்காரர்கள் சுதாகரின் காரை சோதனையிட்டதில் ஒரு பெரிய சூட்கேஸில் ஒரு கோடி அளவிற்கு 500 ரூபாய் பண்டல்கள் பிடிபட்டதின் பேரில் சுதாகரையும் மணி யையும் கைது செய்து திவிர விஜாரணை வளையத்தில் கொண்டுவந்தார்கள்.

போலிஸ் பானியில் அவர்களை விஜாரித்ததில் விவசாய மந்திரி வாங்கிய லஞ்சம் என்பது தெரிய வந்தது. ம்.ல்.ஏ க்களை விஜாரிக்கும் விசேஷ நீதிமன்றம் மந்திரியின் பல தில்லுமுல்லுகளையும் வெளிகொண்டுவந்தது. சுதாகரும் பலருக்கு வேலை வாங்கிதறுவதாக வாக்குக்கொடுத்து பணம் பரித்ததும் வெளிவந்தது. இரண்டு பெண்களை திருட்டு திருமணம் செய்து கொண்டு மும்பாயில் விபசார சந்தையில் விற்றதும்,  சுதாகர் நீதி மன்றத்தில் வாக்குமூலம் அளித்ததினால் அவரை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்

தபஸ்வி ஐ. பி. ஸ். தேர்வின் பல சோதனைகளையும் வென்றதால் அவள் ஐ.பி.ஸ் க்கு தேர்வு பெற்று, அவளை பயிற்சிக்காக  புதிய தேர்வாக மூசோரியில்(LBSNAA)  லால் பகதூர்  சாஸ்த்திரி தேசீய நிர்வாக அக்கடமியிலும் ஹைதிராபாத்திலும் செல்லவேண்டும். மொத்தமாக மூன்று ஆண்டுகள் பயிற்சி பெறுவதற்கு வேண்டிய கடிதம் அவளுக்குக் கிடைத்தது. வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக தபஸ்விக்கு அமைந்தது அவள் வாழ்க்கையில் நேர்மையின் பரிசு.

No comments:

Post a Comment