Saturday, October 30, 2021

ஒரு தமாஷான பேய்க்கதை - சுஜாதா

 ஒரு தமாஷான பேய்க்கதை - சுஜாதா 

(சுஜாதா எழுதிய சிறு சிறு கதைகள் புத்தகத்திலிருந்து)

அந்தக் காவல் நிலையம் இரவில் மௌனமாக இருந்தது. லாக் அப்பில் அதிகம் கைதிகள் இல்லை குடித்த கேஸ்கள் எல்லாம் பெஞ்சில் படுத்துவிட்டார்கள். ரைட்டர் மாதவனால் தூங்க முடியவில்லை

கொசுவத்திச் சுருள் காலடியிலும் மேஜை மேலும் கொளுத்தி வைத்து, கூடக் கொஞ்சம் வேப்பிலையை எரித்து, ஃபேனை முழு ஓட்டத்தில் செலுத்திவிட்டு, கொசுவை லபக் லபக்கென்று விளம்பரங்களில் சாப்பிடும் அந்த பிளாஸ்டிக் சமாசாரம் னவத்தும் மயிலாப்பூர் கொசுக்கள், 'இதெல்லாம் எந்த மூலைக்கு வேலைக்கு உதவாது என்று இஷ்டப்பட்ட இடத்தில் காக்கி உடை மேல் உட்கார்ந்து நேர் வாகாக இன்ஜெக்ஷன் குத்தி, ரத்தம் உறிஞ்சி, மூணு நாளைக்கு ரொப்பிக்கொண்டு நன்றி என்று சொல்லிப் பறந்து சென்றன

மாதவன், கால்களைத் தேய்த்துக்கொண்டு  போலிஸ் வேலையை விட்டுவிடுவதாக மறுபடி தீர்மானித்தார். கன்னத்தில் கடித்த கொகவை விரட்டும் பரபரப்பில் உள்ளே வந்தவனை கவனிக்கத் தவறிவிட்டார். அவன் நேராக வந்து எதிர் நாற்காலியில் உட்கார்ந்தான். கொஞ்சம் களைத்திருந்தான் ஏதோ அடிபட்டவன் போலத் தோன்றினான் காதருகே ரத்தக்கோடு தெரிந்தது.

"யாருப்பா?"

"ஐயா, நான் ஒரு எஃப்ஐஆர் பதிவு செய்ய வந்திருக்கோங்க".

"என்ன விஷயம்?"

"ஒரு கொலை நடந்துபோச்சு. அதைப் பதிவு செய்ய வந்திருக்கேங்க".

"எங்க நடந்துச்சு?"

"இங்கிருந்து 100 அடி தள்ளி இதே ரோடுல"

"செத்தது யாரு?"

"நடராசுங்க"

"உங்க பேரு?"

"நடராசுங்க"

மாதவன் சிரித்தார். 


"செத்தது நடராக.. ரிப்போர்ட் செய்யறதும் நடராசு. வினோதமாத்தான் இருக்குது. இம்மாதிரி கேஸ் இரண்டுமுறை ஆயிருக்கு"

"இறந்ததும் நாந்தாங்க."

"புரியலை. இறந்து போனது நீதான்னா... எப்படிய்யா எஃப்.ஐ ஆர். எழுத வந்திருக்கே?"

"ஏங்க, வரக்கூடாதா? என் சாவை நானே பதியக்கூடாதா?

"நீ செத்துட்டய்யா!"

"அதனால என்னங்க... எஃப்.ஐ.ஆர். எழுதக் கூடாதா?" 

"பாரு, குடிச்சிருக்க நீ... எங்க, ஊது?"

அவன் ஊத

"ஒண்ணுமில்லையே.. சொல்லு. ஏதாவது லேகியம் அடக்கிட் டிருக்கியா சமுதாயத்தின் மேல கோவமா பொய்டரி எழுதுற ஆளா?"

"இல்லைங்க, நான் எறந்துட்டேங்க அதை எஃப்.ஐ.ஆர் பதிய வந்தேங்க"

மாதவன் கோபத்துடன், 


"யோவ் உயிரோட இருக்கற ஆளுதான் நாற்காலில் உக்கார முடியும் பேச முடியும் புகார் கொடுக்க முடியும்"

'என்னால முடியுதுங்களே"

"அப்ப நீ உயிரோடத்தான் இருக்கன்னு அர்த்தம் நோ க்ரைம்"

"அப்ப நான் சாவலையா?"

"செத்ததா நினைச்சிக்கிட்டு இருக்கே  ஒரு கிளாஸ் தண்ணி குடி. எல்லாம் சரியாயிடும்"

"இல்லைங்க, நாந்தாங்க... இப்பத்தாங்க செத்தேன்" என்றான் அழாக்குறையாக.

'சரியாப்போச்சு' என்று அலுத்துக்கொண்டார் மாதவன் ஆனால் அவன் முனறயீட்டில் ஓர் உண்னமத்தனம் இருந்தது குறும்போ, விளையாட்டோ, கேலியோ ஏதும் இல்லை

மாதவனை அது சங்கடப்படுத்தியது

"ஒரு விபத்தில் செத்தங்க. சைக்கிள் ஓட்டிக்கிட்டு வந்தப்ப எதிர்ல ஒரு ஆளு கண்மூடித்தனமா கார்ல வந்து மோதிட்டாங்க. கார் நம்பர் எல்லாம் நோட் பண்ணி வச்சிருக்கங்க. பன்னிரண்டு பதினாறுங்க, உடனே வந்து ரிப்போர்ட் கொடுத்துட்டுப் போவலாம்னும் வந்தேங்க அப்புறம் எனக்கு ஞாபகம் தப்பிடும் பாருங்க"

"யோவ்! வெளையாடறியா?"

"இல்லைங்க, மெய்யாலுமே செத்துட்டங்க."

மாதவன் சற்று நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.

பெஞ்சில் படுத்திருந்த போதை  நீங்கிய குடிகாரன் "ரைட்டர் ஐயாதான் சொல்றாரில்ல. போவியா" என்று அதட்டினான்

"பாரு, நீ செய்யறதெல்லாம் உயிருள்ளவங்க செய்யற வேலைய்யா நீ சாவலை, சாவலை."

"நான் செத்தாக்கங்களே!"

மாதவன் மதனகோபாலுக்கு போன் செய்தார்

"சார்  ராத்திரி வேளையில் தொந்தரவு கொடுக்கறதுக்கு மன்னிச்சுக்கங்க"

"தொந்தரவு கொடுத்தாச்சு, என்ன சொல்லுங்க"

"ஒரு ஆளு டெத் ஒண்னை ரிப்போர்ட் பண்ணணும்ங்கிறான். செத்தது யாருன்னா நான்தாங்கிறான்"

"குடியா/"

"தெரியல. ட்ரக் எதுவும் எடுத்தாப்புலயும் தெரியல. சாதுவாத்தான் இருக்கான்"

"ஒண்ணு செய்யி... அவனை காலைலல வரச்சொல்லு. இன்ஸ் பெக்டர் வந்ததும் பதிஞ்சுக்கலாம்னு சொல்லி அனுப்பிரு".

"கேக்கமாட்டேங்கறான் சார். திருப்பித் திருப்பி நான் செத்தாச்சு செத்தாச்சு'ங்கறான்"

"போனை அவன்கிட்ட கொடு, நான் பேசறேன்"

"இந்தாய்யா, எங்க எஸ். பி. கிட்ட பேசு"' என்று போனை அவனி டம் கொடுத்தார் மாதவன்.

அடுத்தகணம் மயக்கம் போட்டு தொபுக்கென்று விழுந்தார்

"அய்யா வணக்கங்க! எம்பேரு நடராசுங்க" என்றது  அந்தரத்தில் தொங்கிய போன்

No comments:

Post a Comment