ஜெய் ஸ்ரீராம் 🙏🏻🙏🏻
ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயாய நம🙏🏻🙏🏻
||திட்டை ஆஞ்சநேயா் கோவில் ||
இந்த கோவிலில் என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா...
கோவிலில் நுழையும்போதே , ஒரு சில பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்வது போல , அர்ச்சகர் , நீங்கள் வந்த காரியத்தை கூறி திகைப்பில் ஆழ்த்திவிடுகிறார்.
உங்கள் காரியம் ஜெயம் உண்டாகட்டும் என்று மனமார வாழ்த்தி , ஆஞ்சநேயரை மனமுருக துதிக்கிறார்.
மிக முக்கியமான விஷயமாக , இங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு - நீண்ட நாட்களாக , எட்டாக் கனியாக இருந்து வரும் திருமணப் பிரச்னை , உடனடியாக தீர்ந்து விடுகிறது...
பல பேர் சொன்ன, முற்றிலும் உண்மையான விஷயம்.
தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு - உடனடியாக வரம் அளிப்பதில் , பிரசித்தி பெற்றவராக இந்த ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் விளங்குவதால் , வாய்ப்பு கிடைக்கும்போது - நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள்.. !
தஞ்சை-கும்பகோணம் சாலையிலுள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது நவநீத கிருஷ்ணன் ஆலயம்.
இக்கோயிலில் ஸ்ரீராம பக்த காரிய சித்தி ஆஞ்சநேயர் மிக அபூர்வமாக வடக்கு நோக்கி காட்சி தருகிறார்.
ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து. 24.10.21.கிருஷ்ணார்பணமஸ்து
No comments:
Post a Comment