களை கட்ட ஆரம்ப்ச்சாச் தீபாவளி..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
“ ஏண்டீம்மா உன் புள்ள இப்டி ஒத்தக்கால்ல நின்னுன்டிருக்கான்..?.”.
“ தல தீபாவளிக்கு வந்த அத்திம்பேர்ட்ட ஆட்டம்பாம் வாங்கித் தரச்சொல்லி கேட்ருக்கான். அவரான்னா , நானே இதுவரைல ஆட்டம்பாம்லாம் வெச்சதே இல்ல..உனக்கு இந்த வயசுல ஆட்டம்பாம்லாம் ஜாஸ்த்தி..குருவி வெடிங்கதான் வாங்கித் தருவேனு சொல்ட்டாராம். இவனானா ஆட்டம்பாம்தான் வேணும்னு ஒத்தக்கால்ல நின்னு அடம்பிடிக்கறாம்மா..!.”.
“ சரி..பாவம் கொழந்த..இந்தா , இந்த சோமாசிய கொண்டு போய் குடு..சாப்ட்டுட்டு தெம்பா நிக்கட்டும். மாப்ளைக்கு உன்னன்ட பேசவே பயம் – இதுல அவருக்கு ஆட்டம்பாம்லாம் வெக்கற அளவுக்கு தைர்யம் ஏது..?.
இந்த காலத்து பசங்க அப்டி இல்லியே..ராக்கெட்டயே பாட்டில்ல வெச்சு விடாம கைலன்னா பிடிச்சு விடறதுகள்..!.”.
“ முள்ளுத் தேன்குழல் பிழிஞ்சாச்சு .தட்டை தட்யாச்சு. சோமாசி இதோ இப்ப முடிஞ்சிடும்..வேற என்னம்மா பண்ணனும்..?”.
“ என்ன இப்டி கேட்டுட்ட..?.இன்னும் மிக்சர் பண்ணனும்..ரிப்பன் சுத்தனும்..முந்திரிப்பருப்பு கேக் பண்ணனும்..ரவா லாடு பிடிக்கனும்..நெறய வேல இருக்கேடியம்மா..?.”.
“ முடியாம ரொம்பலாம் இழுத்துவிட்டுக்காதமா..ச்சும்மா சாஸ்த்ரத்துக்கு ஒரு காரம் ஒரு ஸ்வீட் பண்ணா பத்தாதான்ன..? “.
“ என்னமோடீம்மா..ஆத்ல கொழந்தைங்கள்லாம் இருக்கறச்ச அப்டி கொஞ்சமாலாம் பண்ண எனக்கு கை வராது..நன்னா வெரைட்டியா ஏகத்துக்கு பண்ணி வெச்சா போகவர திம்பால்ல..அதுக்குத்தான்..”.
“ அதுக்கில்லமா..உனக்கும் வயசாறது..இப்டி கஷ்டப்பட வேணாம்னுதான்..”.
“ இந்த வருஷ பண்டிகைக்கு அந்த ஆண்டவன் என்னை இருக்க வெச்ருக்கான் , ஆரோக்யமா !.அடுத்த வருஷம் அந்த பாக்யம் கெடைக்றதோ இல்லியோ..நன்னா இருக்கற வரைல , ஒடம்பும் ஒத்துழைக்கறச்ச அத அத அந்தந்த நாள் கெழமைம்போது நாம செய்யாம விடப்படாத்..!.”.
“ அப்டிலாம் பேசாதமா..நீ இன்னும் பல காலத்துக்கு எங்களோட இருக்கனும்..! “.
“ அதலாம் நம்ம கைல கெடயாத்டி..மேல இருக்கறவன் போடற பிளான்படிதான் நடக்கும்..நடக்கட்டுமே..!.”.
“ நாங்க சொன்னா நீ கேட்டாத்தான..சரி..சரி..கையோட கொஞ்சம் பாதுஷாவயும் பண்ணிடேன்..உன் பெர்ய மாப்ளைக்கு ரொம்ப பிடிக்கும்..!.”.
“ அதுக்கென்ன..ம் , பேஷா பண்ணிடறேனே..!.”.
( கண்ல பட்ட பழைய ஆனந்த விகடன் படத்த பார்த்ததும் ச்சும்மா தோணினதுதான் !.).
--மடிப்பாக்கம் வெங்கட்.
No comments:
Post a Comment