Monday, October 25, 2021

வேப்பம்பூ ரசம்

 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேப்பம்பூ ரசம் தயாரிக்கும் முறை

தேவையான மூலப்பொருட்கள்

1.வேப்பம் பூ - ஒரு கைப்பிடி அளவு
2.புளி - சிறிதளவு 
3.காய்ந்த மிளகாய் - 2 எண்ணிக்கை
4.பெருங்காயத்தூள் - சிறிதளவு
5.தேங்காய் எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
6.உப்பு - தேவையான அளவு
7.கடுகு - ஒரு தேக்கரண்டி

 செய்முறை

👉🏼முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.

👉🏼பிறகு வேப்பம்பூவை சிறிதளவு தேங்காய் எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும்.

👉🏼பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு அதனுடன் கடுகு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்து தாளிக்கவும்.

👉🏼மேலும் இதனுடன் புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

👉🏼சிறிது கொதித்ததும் வறுத்த வேப்பம்பூ, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

👉🏼கொதித்ததும் சிறிதளவு தண்ணீர் விட்டு, மேலும் ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.

👉🏼இப்போது சுவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேப்பம்பூ ரசம் தயார் ஆகி விடும். இதனை மதிய உணவுடன் சேர்த்து எடுத்து கொள்ளுங்கள்.



No comments:

Post a Comment