ப்ரவுன் ரைஸ் பொங்கல்
🌼 மல்லிகா🌼
தேவையான பொருள்கள் ப்ரவுன் ரைஸ் - ஒரு கப், பயத்தம் பருப்பு - கால் கப், மிளகு - ஒரு தேக்கரண்டி, சீரகம் - ஒரு தேக்கரண்டி, இஞ்சி - சிறு துண்டு (நறுக்கவும்), முந்திரி - சிறிதளவு, பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி, உப்பு - சிறிதளவு, கறிவேப்பிலை, நெய் - தாளிக்க
செய்முறை ப்ரவுன் ரைஸ் மற்றும் பயத்தம் பருப்பை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
*இஞ்சியை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும்
குக்கரில் ப்ரவுன் ரைஸ், உப்பு, பெருங்காயம், பயத்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குழைய வேக வைக்கவும்
பேனில் நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரி சேர்த்து பொரித்து சேர்க்கவும்
லேசாக நெய் விட்டு கிளறி பரிமாறவும். சுவையான கமகம பொங்கல் தயார்.தேங்காய் சட்னி, கொத்சு, சாம்பார் ஆகியவை தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும
சூடாக சாப்பிடுவது நல்லது இல்லையென்றால் விரைத்து கொள்ளும்
🌼 மல்லிகா🌼
No comments:
Post a Comment