Monday, October 25, 2021

சாட் ரெசிப்பிக்கள்.

 09.06.21 Wednesday 

இன்று ஒரு தகவல்

Snacks for the evening with hot coffee/ Tea .

Try at home

 நீங்களும்  வீட்டில் 

செய்து எல்லோருக்கும் கொடுத்து சபாஷ் பெறலாம்.

எளிதில் செய்யக்கூடிய ஐந்து வகையான சாட் ரெசிப்பிக்கள்.

சேவ் பூரி

தேவையான பொருட்கள்:
ஸ்வீட் கார்ன், 
தக்காளி - தலா ஒன்று, 
சாட் மசாலா பொடி - ஒரு டீஸ்பூன், 
எலுமிச்சம்பழம் - அரை மூடி, 
சிறிய பூரிகள் - 10 (கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்), 
காராசேவ், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

ஸ்வீட் கார்னை வேக வைத்து உதிர்க்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். ஒரு தட்டில் பூரிகளை பரத்தி வைக்கவும். அதன் மீது உதிர்த்த ஸ்வீட் கார்ன், தக்காளி, சாட் மசாலா பொடி, எலுமிச்சைச் சாறு, காராசேவ், உப்பு ஆகியவற்றை தூவவும்.

ஹெல்தியான, எளிதில் செய்யக் கூடிய சாட் வகை இது. விரும்பினால் கிரீன் சட்னியையும் மேலே விட்டு பரிமாறலாம்.

ஸ்பைஸி துக்கடா சாட்

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2, 
மைதா மாவு - ஒரு கப், 
ஸ்வீட் சட்னி, 
சாட் மசாலா பொடி - தலா ஒரு டீஸ்பூன், 
கேரட் துருவல் - 2 டீஸ்பூன், 
ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை), 
கொத்தமல்லி - சிறிதளவு, 
எண்ணெய், உப்பு, ஓமம் - தேவையான அளவு.

செய்முறை:

மைதா மாவுடன் ஓமம், உப்பு சேர்த்துப் பிசைந்து, 10 நிமிடம் அப்படியே வைத்து. பின்பு சப்பாத்தி போல இட்டு, டைமண்ட் வடிவ பிஸ்கட்டுகளாக வெட்டி எடுத்து, எண்ணெயில் பொரிக்கவும். இதுதான் துக்கடா.

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, துண்டுகளாக்கவும். இதனுடன் பொரித்த துக்கடா, ஸ்வீட் சட்னி, சாட் மசாலா பொடி கலந்து மேலே கேரட் துருவல், ஓமப்பொடி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

சீஸ் சாட்

தேவையான பொருட்கள்:
சீஸ் துருவல் - ஒரு கப், 
ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - கால் கப், 
உருளைக்கிழங்கு - 2, 
வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, 
சாட் மசாலா பொடி, 
ஸ்வீட் சட்னி, 
கிரீன் சட்னி - தலா ஒரு டீஸ்பூன்,
 உப்பு, எலுமிச்சைச் சாறு - தேவையான அளவு, 
கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை:

உருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, உதிர்க்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

ஒரு அகலமான தட்டில் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி சேர்த்து. மேலே சாட் மசாலா பொடி, ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி, உப்பு, எலுமிச்சைச் சாறு, ஓமப்பொடி, சீஸ் துருவல் சேர்த்து. கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.

சிப்ஸ் சாட்

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2, 
உருளைக்கிழங்கு சிப்ஸ் - ஒரு கப், 
மாதுளை முத்துக்கள் - சிறிதளவு, 
சாட் மசாலா பொடி, 
ஸ்வீட் சட்னி - தலா ஒரு டீஸ்பூன், 
கொத்தமல்லி - சிறிதளவு, 
எலுமிச்சைச் சாறு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, துண்டுகளாக்கவும். இதனுடன் உருளைக்கிழங்கு சிப்ஸ், மாதுளை முத்துக்கள், சாட் மசாலா பொடி, ஸ்வீட் சட்னி, கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு கலந்து பரிமாறவும்.

இனிப்பு, புளிப்பு, காரம் என்று வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த சிப்ஸ் சாட்.

கீரை சாட்

தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - ஒரு கட்டு, 
உருளைக்கிழங்கு - 4, 
வேர்க்கடலை - கால் கப், 
சாட் மசாலா பொடி, 
ஸ்வீட் சட்னி - தலா ஒரு டீஸ்பூன், 
எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, 
கொத்தமல்லி, ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை), கேரட் துருவல், 
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முருங்கைக் கீரையை சுத்தம் செய்து, ஆய்ந்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, துண்டுகள் செய்யவும். வேர்க்கடலையை வறுக்கவும்.

கீரை, உருளைக்கிழங்கை ஒன்று சேர்த்து. வேர்கடலை, சாட் மசாலா பொடி, ஸ்வீட் சட்னி, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, ஓமப்பொடி, கேரட் துருவல், உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து நிறைந்து உள்ள தால், அனைத்து வயதினருக்கும் ஏற்ற சாட் இது..

+++++

No comments:

Post a Comment