ஊர் கதை - ஸ்தல புராணம்
-மஹா பெரியவா.
பகுதி - 8
தெய்வத்தின் குரல்.
‘குடமூக்கு’ என்பதே அதற்குத் தேவாரத்தில் உள்ள பெயர். அங்கே லிங்கமாக அந்த மண் கலயமே வைக்கப்பட்டு விட்டது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. கவசம் போட்டுத்தான் அதற்கு அபிஷேகம் நடக்கிறது. ‘கும்பேச்வரர்’ என்று பெயர். அமிருதம் விழுந்த இடம்தான் மஹாமகக் குளம்.
இது அமிருதம் வெளிவந்த க்ஷேத்ரம் என்பதற்குப் பொருத்தமாக இங்கேயுள்ள சார்ங்கபாணிப் பெருமாளை “ஆரா அமுதன்” என்றே ஆழ்வார்கள் பாடியிருக்கிறார்கள்! வைஷ்ணவர்கள் கும்பகோணத்தைக் குடந்தை என்பார்கள்.
இப்படிப் பல க்ஷேத்ரங்கள் inter-connected ஆக இருந்து கொண்டு ஸ்தல புராணங்கள் நிஜந்தான் என்று உறுதிப்படுத்துகின்றன. திருவழுந்தூர், கும்பகோணம் குறித்த பல க்ஷேத்திரங்கள் ஒன்றுக்கொன்று கிட்டக் கிட்ட இருப்பவை. இவை ஒரு நாலைந்து மைல் ரேடியஸுக்குள் அகப்பட்டு விடும்.
இதைவிட விஸ்தாரமான ஸ்கேலில் தூர தூர இருக்கிற க்ஷேத்திரங்களின் பரஸ்பர ஸம்பந்தத்தைச் சொன்னால், ஸ்தல புராணங்கள் கட்டுக்கதை இல்லை என்று இன்னும் திடமாகத் தெரியும்.
சொல்கிறேன்...
தொடரும் .... 🙏
No comments:
Post a Comment