Thursday, October 28, 2021

டாக்டர் ரங்கசாமி ஸ்ரீனிவாசன்.

Thanks to Venugopal Iyer ...

அந்த நாட்களில்.. . ஆபரேஷன் என்றாலே திக் என... .. பட பட என்று வரும்,.. கத்தி,, கபடா.. ரத்தம், வலி.. நாட் கணக்கில் மருத்துவமனை தங்கல், சங்கடங்கள்.. மருத்துவர் தவறுகள். 

. இன்று..? . பல ஆப்பரேஷன்கள்  சர்வ சாதாரணம்.  காரணம்.. கத்தி இன்றி,.. அதிக  ரத்தம் இன்றி ," லேசர் சர்ஜரி." .. 

 ஹாஸ்பிட்டல். போனதும் தெரியாது, வந்ததும் தெரியாது. அன்றே டிஸ்சார்... வீடு.. 

 கண்.. பொது அறுவை , நரம்பு, குடல், ரத்தக்குழாய். தோல்..திசுக்களை, வெட்ட, ஒட்ட, வடிவமைக்க.

எங்கெல்லாம் "மென் திசு"... அறுவை சிகிச்சை  தேவை உள்ளதோ அங்கெல்லாம் "லேசர் அறுவவை....

.முக்கியமாக.. "கண்"... , கிட்டப்பார்வை, தூரப்பார்வை. மற்ற பல கண் பார்வை குறை பாடுகளுக்கு....... கண்  கண்ட தீர்வு 


உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்களுக்கு  நலமான, , எளிதான,  பயமற்ற, 100%  பத்திரமான பல அறுவை  சிகிச்சைகள் ....

இதை சாத்திமாக்கிய மா மனிதர். முப்பது வருடங்களுக்கு மேல் அமெரிக்க IBM இல் "ஒளி ரசாயன" ஆராய்ச்சிக் கூடத்  நலைவர்.. 

இன்று கம்ப்யூட்டர் பலகைகளில்  circute, பார்கிறோமே.. அது அவர் கண்டு பிடித்த தொழில் நுட்பம் தான் 

லேசர் ஜெட் பிரின்டிங்கும்...   லேசர் பயன்படுத்தி.... 

அவர் ஆராச்சி மூளை இதையே  உயிர் உள்ள தசை  மேல் பயன் படுத்தினால்,??

முயற்சி வெற்றி.  

அது அழகாக, அளவாக தசையை  கச்சிதமாக  எந்த  தீசலும், ரத்தமும், காயமும் இல்லாமல் வெட்டியது. ஒட்டியது.. 

இதை எப்படி  மனித சமுதாத்திற்க்கு  பயன் படுத்தலாம்?? .. உலகம் முழுவதும் மக்கள் விழித்திரை பிரச்சனைகளில்   அவதிப்படு வது..  நினைவு வந்தது..

 பல கண் அறுவை  மருத்துவர்களுடன் இணைந்து பல வருடங்கள் ஆராய்ந்தார்

 1981 இல் ultraviolet excimer laser பயன் படுத்தி. Ablative Photodecomposition (ADP) Excimer laser... "LASIK..".... "லேசர் அறுவை" சிகிச்சை தொழில் நுட்பம் பிறந்தது , கண்டு பிடித்தார்.. 

அது கோடிக்கணக்கான மக்கள் நல்ல கண் பார்வை.....குருடடற்ற .. நல் வாழ்வு வாழ உதவியது.... .உதவுகிறது.. 

 வேறு பல அறுவை சிகிச்சையிலும்.. பல் வேறு  பரிமாணங்களில்.. வளர்ச்சி பெற்றது.. பயன் படுகிறது.. . அடிப்படை இவர் கண்டு பிடிப்பு தான்.. 

அது மட்டும் அல்ல  , 

23, அமெரிக்க அறிவியல் உரிமம் (பேடெடண்டுகள்) அவர் கண்டுபிடிப்புகளுக்கு  ....... 130 ஆராய்சி கட்டுரைகள். 

அவர் கண்டு பிடிப்பை பாராட்டி நோபல் பரிசுக்கு சமமான அமெரிக்க அரசின் மிக உயர்ந்த.... விஞ்ஞானி களுக்கு வழங்கும் விருதான.. " National Medal of Technology and Innovation" , விருதை 2013.இல் வெள்ளை மாளிகையில்  அமெரிக்க அதிபர் " பாரக் ஒபாமா" இவருக்கு  வழங்கினார்..

மேலும் அவர் அமெரிக்காவின் தலை சிறந்த அறிவியல் கண்டு பிடிப்பானவர் வரிசையில் " National Inventors Hall of Fame, "... உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்படல்... 

 அது சாதாரணமானதா??? 

 அந்த வரிசையில் சிலர்.... டெலிபோன் க்ண்டு பிடித்த "அலெக்சாண்டர் கிரஹாம் பெல்," பவுண்ட்  பென் கண்டுபிடித்த "லூயிஸ் வாட்டர்மென்." தையல் மெஷின் கண்டு பிடித்த.  "சிங்கர்" . "Safety பின்கண்டு பிடித்த  "வால்டர் ஹண்ட்". MRI  கண்டு பிடித்த. " R. V. மேடியன்". மற்றும் பல  மாபெரும்  கண்டு பிடிப்பாளர் வரிசையில்.......... "இவரும்..* 

அவர் பெற்ற விருதுகளில் சில 

1997,  American Chemical Society's Award for Creative Invention, 
 ACS North East Section's Esselen Medal.
In 1998,  Max Delbruck Prize in Biological Physics by the American Physical Society.
In 1999,  elected a member of the National Academy of Engineering.
In 2002,  inducted into the US National Inventors Hall of Fame.
In 2004,  Prize for Industrial Applications of Physics from the American Institute of Physics.
In 2011,H. Russ Prize from Ohio University and the National Academy of Engineering (a bioengineering achievement that significantly improves the human condition."
In 2012,  recipients of the National Medal of Technology and Innovation.The award was presented on February 1, 2013 by President Barack Obama, to acknowledge   the Excimer laser, leading to the development of LASIK Surgery. 

மேலும் பல, இடம் போதாது.. 

ஆமாம்... . எல்லாம் சரி. 

யார் அந்த மா மனிதர்,????........ அவர் ஒரு வெள்ளைக்காரர் ஆகத் தான்  இருக்கும்  என்று  தானே நினைத்தீர்கள்.. , 

அது தான்.. இல்லை.... , இல்லை.... "அவர்" 

ஒரு பாரதீயர், தமிழர், அதுவும் சென்னையை சேர்ந்தவர். ஐயர். ..

 அவர் பெயர் ரங்கசாமி ஸ்ரீனிவாசன்.. நண்பர்களுக்கு...... ( டாக்டர்)..... டாக் ஸ்ரீனீ.... 

அப்போதைய மதராசில் 1929 இல் பிறந்து. மதராஸ் பல்கலை கழகத்தில் இளங்கலை, மற்றும் முது கலை பட்டம் முதல் வகுப்பில்.. 

1953 இல் அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலை கழகத்தில் பிஎச்டி.. 

பிறகு ஐபிஎம் இல் ஆராச்சி. 23 கண்டுபிடிப்பு  உரிமங்கள்  (பேட்டடண்டுகள்..).. . பெயர், புகழ். 

அவர் தன்     LASIK Surgery.  கண்டுபிடிப்பு பேட்டண்டை IBM இக்கு      கொடுத்தது வெறும் §   10,000..த்திற்க்கு.  தானாம்.. 

அவர்கள் அதை விற்றது § 15 மில்லியன். க்கு.... 

இதை பற்றி  டாக்டர். ஸ்ரீனிவாசனிடம் கேட்ட போது அவர் சொன்னது  "அவர்களால் பல கோடி மக்களை அணுக முடியும் உதவ முடியும்... மாநிலம் பயனுறும் அந்த மகிழ்ச்சியே  எனக்குப் போதும்..." 

இதுவல்லவோ. "தன் நலம் கருதா" சேவை. 

அடுத்த முறை நாம்  லேசர் சிகிக்சை பற்றி பேசினாலோ,கேட்டாலோ...நம்மவர்களுக்கோ, நமக்கோ.  தேவைப்பட்டாலோ ..

 நம், பாரதீயர், தமிழர், மா மனிதர்" . டாக்டர். ரங்கசாமி ஸ்ரீனிவாசனை.".. நினைவு கூர் வோம்

 அவர்  திசை நோக்கி நன்றியுடன்  வணங்குவோம்.. பெருமிதம் கொள்வோம்.. 

இவர் இன்னும் நம்முடன் உள்ளார் "வாழ்க நீ எம்மான்"... , இசைபட 

வந்தே மாதரம், ஜெய் ஹிந்த்


Compiled from Sources 

No comments:

Post a Comment