Wednesday, October 27, 2021

காளியாகுடி ஓட்டல்.

 மாயூரம் / மாயவரம் /  மயிலாடுதுறை

மாயவரம் ஒரிஜினல் காளியாகுடி ஓட்டல்....

மயிலாடுதுறை  காளியாகுடி ஓட்டல், மயிலாடுதுறையைச் சேர்ந்த கே.வி.சீனிவாசய்யரால் 1931-ல் தொடங்கப் பட்டது. இன்றும் நல்ல பெயரோடு, இங்கு சாப்பிடுபவர்கள் பாராட்டும்படி அமைந்துள்ளது. 

ஆரம்பித்த காலத்தில் சீனிவாசய்யர் போட்டுத் தரும் டிகிரி காபிக்காக, பெரிய பெரிய மனிதர்களெல்லாம் ஓட்டல் திறப்பதற்கு முன்பிருந்தே வந்து காத்திருப்பார்களாம். 

‘ஓட்டல் வாசலுக்கே எருமை மாட்டைக் கொண்டுவரச் செய்து கண்முன்னால் கறந்து, தண்ணீர் விடாமல் காய்ச்சி, பித்தளை ஃபில்டரில் டிகாஷன் இறக்கி, அவர் காபி போட்டுக் கொடுத்தால், வாசனையே மயக்கும்...  கொப்புளம் கொப்புளமாக டம்ளரில் நுரை தளும்பும்’  என்று வாயூறச் சிலாகிக்கிறார்கள் மயிலாடுதுறைக்காரர்கள். 

கிட்ட்த்தட்ட ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மாயவரத்தில் அதன் பெருமைகளில் ஒன்றாக தன்னையும் இணைத்துக் கொண்டிருந்தது காளியாகுடி.

சாலையிலிருந்து ஒரு நாலு படி ஏறி ஒரு வராந்தாவைக் கடந்து அந்த சொர்க்கத்தில் நுழைய வேண்டும். கொலாப்சிபிள் கேட் திறக்கும் சத்தம் கேட்கும். மிதியடியை உதறி வாசல் முன் போடுவார்கள். வாசல் தெளித்து கோலம் போடப்பட



No comments:

Post a Comment